இஸ்ரவேல் புத்திரர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது தேவன் அவர்களிடம் பேசினார். எகிப்தியர்களின் கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறையின் நிமித்தம் அவர்கள் புலம்பினார்கள். தேவன் தனது தூதரான மோசேயை அனுப்பி ஏழு விதமான வாக்குத்தத்தங்களை அளித்தார் (யாத்திராகமம் 6:6-8). இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, மனிதகுலம் முழுவதும் சாத்தானின் கொடுங்கோன்மை மற்றும் இருள் என்னும் பேய்களின் கீழ் உள்ளது. நற்செய்தி இந்த வாக்குத்தத்தங்களை அனைத்து மனிதகுலத்திற்கும் வழங்குகிறது மற்றும் விசுவாசத்துடன் அவரிடம் வருபவர்கள் இந்த ஆசீர்வாதங்களைப் பெறலாம்.
1) நான் உங்களை வெளிக் கொண்டு வருவேன்:
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி பாவத்தின் சம்பளம் மரணம் என இரண்டாவது மரண தண்டனையை தங்கள் மீது சுமக்கிறார்கள் (ரோமர் 3:23; 6:23). மனந்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, தேவனுடைய ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் (அப்போஸ்தலர் 26:16-18).
2) நான் உங்களை விடுவிப்பேன்:
எகிப்திலிருந்து வெளியே வந்த பிறகு, தேவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும் பாதுகாப்பையும் உறுதியளித்தார். தேவ பிள்ளைகள் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரால் பாதுகாக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளனர் (எபேசியர் 1:13).
3) நான் உங்களை மீட்பேன்:
மீட்பதற்கான கிரயத்தை தேவன் அளிப்பார். மீட்கும் தொகையை செலுத்தியோ அல்லது கலகத்தை உருவாக்கியோ இஸ்ரவேல் புத்திரர்கள் தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்ள முடியவில்லை. "அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" (எபேசியர் 1:7).
4) நான் உங்களை என் சொந்த ஜனங்களாக்குவேன் :
அவர்கள் அடிமைகளாகவோ அல்லது அலைந்து திரிபவர்களாகவோ அல்லது அனாதைகளாகவோ இருக்க மாட்டார்கள், ஆனால் தேவ ஜனங்களாக மாறுவார்கள். "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12; I பேதுரு 2:10).
5) நான் உங்கள் தேவனாயிருப்பேன்:
அவர்கள் எகிப்திய பார்வோனின் கீழ் அல்ல, தேவ இறையாண்மையின் கீழ் வாழ்வார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் ராஜாக்களின் ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தராகவும் இருக்கும் அவருடைய திருவுளத்தின் கீழ் வாழ்கின்றனர் (வெளிப்படுத்துதல் 19:16).
6) நான் உங்களை ராஜ்யத்திற்கு அழைத்து வருவேன்:
தேவன் பரலோக ராஜ்யமான நித்திய ஜீவனை வாக்களித்துள்ளார். விசுவாசிகளின் நித்தியம் பரலோகத்தில் தேவ சமூகத்தில் ஆராதனையும் சந்தோஷமாக செலவழிக்கப்படும் .
7) நான் வாசஸ்தலங்களை உங்களுக்கு தருகிறேன்:
தேவன் தம்முடைய சீஷர்களுக்காக குறிப்பிட்ட அல்லது தனித்துவமான ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுகிறார் (யோவான் 14:1).
நான் ஏழு விதமான ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்கின்றேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்