வேதாகமும் நற்செயல்களும்

சென்னை மாநகரில் 2021 நவம்பர் மாதம் 6 நாட்களாக கனமழை பெய்ததால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, சாலைகள் நீரில் மூழ்கின, மக்கள் உணவு, மின்சாரம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டனர். இந்த சூழ்நிலையில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உதயகுமார் என்ற 24 வயது இளைஞர் மயங்கி விழுந்து கிடந்தார். தண்ணீரில் நனைந்ததால் அவர் இறந்திருப்பார் என கருதப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களுக்கு இந்த தகவல் கிடைத்தது, அவர் உடனே தனது குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அவர் பயிற்சி பெற்ற தடகள வீராங்கனை ; அதுமட்டுமல்ல அவர்  ஒரு பளுதூக்கி. அந்த நபரிடம் அசைவுகள் இருப்பதை உணர்ந்து, முதலுதவி அளித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் (செய்தி: நவம்பர் 13, 2021). இவர் ஏற்கனவே நீண்ட காலமாக காவல்துறையில் பணி புரிந்து கொண்டு பல சேவைகளையும் செய்து வருகிறார்;  1992 ஆம் ஆண்டு கும்பகோண மகாமகம் கூட்ட நெரிசலில் அநேகர் சிக்கிய போது கூட பலரைக் காப்பாற்றியுள்ளார், மேலும் ஆதரவற்ற பெண்களை மருத்துவமனைகளில் அனுமதித்தல், நடைபாதையில் வசிப்பவர்களுக்கு உடைகள், துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களை விநியோகித்தல் என தேவையில் உள்ளோருக்கு உதவிகளை செய்தார். இதைப்பற்றி ஒரு நிருபர் அவரிடம் கேட்டதற்கு, தனது செயலுக்கு மூன்று காரணங்களைச் சொன்னார்.

1) வேதாகமம்:
அந்நியரை உபசரிக்கவும், நேசிக்கவும், விருந்தோம்பல் காட்டவும், நல்ல செயல்களைச் செய்யவும் தேவனுடைய வார்த்தை கற்பிக்கிறது (மத்தேயு 22:37-39; எபிரெயர் 13:2). ஆம், "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" (கலாத்தியர் 6:9). 

2) பெற்றோர்:
ராஜேஸ்வரி கூறியதாவது: என் தந்தை, போலீசில் இருந்தவர், பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் படும் துன்பங்களை எப்போதும் என்னோடு பகிர்ந்து கொள்வார்.  மேலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆம், கற்பிப்பதும், தார்மீக ஒழுங்குகளை மனதில் விதைப்பதும்,  சமூகத்தின் மீதான அக்கறையையும் பொறுப்புணர்வையும் கற்றுக் கொடுத்தலும் பெற்றோரின் முதன்மைப் பொறுப்பு. அவரது தந்தையால் தன்னலமின்றி சமூகத்திற்குச் சேவை செய்ய அவளை ஊக்குவிக்கவும், அதற்கு தயார்படுத்தவும் மற்றும் உற்சாகப்படுத்தவும் முடியுமே.

3) அன்னை தெரசா:
கொல்கத்தாவில் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், மரண தருவாயில் உள்ளவர்கள், ஊனமுற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் என அநேகருக்கு தன்னலமின்றி ஒரு பெண் சேவை செய்தார். அவரின் சேவை ஆயிரக்கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியது. ஆம், அன்னை தெரசாவின் வாழ்க்கை ராஜேஸ்வரிக்கு உத்வேகம் அளித்தது, ஏழைகளின் வலி மற்றும் துயரத்தைப் போக்க பங்களித்தது என்றால் மிகையாகாது (செய்தி: நவம்பர் 13, 2021). 

பின்பதாக அவரை தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் பாராட்டினர்.  சமூகத்தில் அவரின் பணி மற்றும் சேவையின் நிமித்தம் அவரது சிறந்த செயல்திறன் அவளை உலகிற்கு வெளிச்சமாகவும் பூமிக்கு உப்பாகவும் ஆக்குகிறது (மத்தேயு 5:13-16).

 இருளில் வாழும் ஜனங்களுக்கு பெரிய வெளிச்சத்தைக் காண நான் உதவி செய்கிறேனா?  

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download