"நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி" (நீதிமொழிகள் 14:34). ஒரு தேசம் உன்னதமான தேசமாகவும் மாறலாம் அல்லது தோல்வியுற்ற தேசமாகவும் மாறலாம்.
1) சத்தியம்:
தேவனுடைய வார்த்தையே சத்தியம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சத்தியம். தேவனின் முழுமையான சத்தியத்தை நீர்த்துப்போகவோ அல்லது சமரசம் செய்யவோ அல்லது பிரிக்கவோ முடியாது. இந்தியாவில், தேசிய சின்னத்தில் 'சத்யமேவ் ஜெயதே' என்பதான பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது; அதாவது: வாய்மையே வெல்லும். துரதிர்ஷ்டவசமாக, உண்மை பொய்யாக மாற்றப்படுகிறது, சில சமயங்களில் அடக்கப்பட்டு ஓரங்கட்டப்படுகிறது.
2) சமத்துவம்:
அனைவரும் தேவ சாயலில் படைக்கப்பட்டவர்கள், ஆதாம் மற்றும் ஏவாள் தம்பதியிடமிருந்து வந்தவர்கள், கிறிஸ்து அனைவருக்காகவும் தான் மரித்தார். எனவே எல்லா மனிதர்களும் சமமாகப் பிறக்கிறார்கள், ஆனால் சமமாக நடத்தப்படுவதில்லை அல்லது மதிக்கப்படுவதில்லை. ஒரு முற்போக்கான தேசம் அனைத்து குடிமக்களையும் சமமாக, மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்றதாக கருதுகிறது.
3) ஏழைகள் மீதான அக்கறை:
ஏழைகள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டு, அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, பசியால் யாரும் இறக்காதபோதுதான் ஒரு தேசம் நேர்மையானதாகும். ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வாக்கு என்ற அரசியல் சமத்துவம் உள்ளது. இருப்பினும், பொருளாதார அல்லது சமூக சமத்துவம் என்று வரும்போது, ஒரு பற்றாக்குறை உள்ளது. சிலர் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு, வறுமைச் சுழற்சியில் இருந்து வெளியேற முடியாமல் உள்ளனர் அல்லது தவிக்கின்றனர்.
4) கல்வி:
ஒரு உயர்ந்த தேசம் எல்லோருக்குமான கல்வியைக் கொண்டுள்ளது, அதனால் அனைத்து மக்களும் அறிவுடையவர்களாகவும், கற்கவும், புரிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும், சமூகத்திற்கு பங்களிக்கவும் முடியும்.
5) ஆரோக்கியம்:
ஆரோக்கியமான குடிமக்களைக் கொண்ட நாடு வளர்ச்சியுடையதாக இருக்கும். குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய நல்ல சுகாதாரப் பாதுகாப்பு எந்த நாட்டினதும் தரிசனமாகவும் இருக்க வேண்டும்.
6) பேச்சு சுதந்திரம்:
உயர்ந்த நாடுகள் அச்சுறுத்தல் அல்லது தாக்குதலுக்கு ஆளாகாமல் அனைவரும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்கின்றன.
7) வழிபடுவதற்கான சுதந்திரம்:
பெரிய தேசங்களும் தேவன் ஜனங்களுக்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை (சுயாதீனத்தை) அளித்துள்ளார் என்பதை புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் மதம், வழிபாடு மற்றும் நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கலாம்.
8) நீதி:
நீதியுள்ள நாடுகளில், நீதி நதியாகப் பாய்கிறது, ஆனால் மற்ற தேசங்களில் அது எட்டியைப் போல கசப்பாக மாறும். "நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது" (ஆமோஸ் 5:7,24).
9) செழிப்பு:
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அத்தி மற்றும் திராட்சைச் செடியின் கீழும் அமர வேண்டும், இது செழிப்பைக் குறிக்கிறது (மீகா 4:4).
10) அமைதி:
வன்முறை, வெறுப்பு மற்றும் பிளவுகள் குறைக்கப்படும் இடத்தில் உள்ள நாடுகள் அமைதியை அனுபவிக்கின்றன.
எனது தேசம் நீதியுள்ள மற்றும் உன்னதமான தேசமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்