லாபம் மற்றும் பலன்

“இந்தக் காப்பீட்டினால் எனக்கு என்ன லாபம்? நான் இறந்தால் மற்றவர்கள் தானே பலன் அடைவார்கள்" என்பதாக ஒரு இளைஞன் காப்பீட்டு முகவருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்.    உண்மையில், காப்பீட்டில் பிரீமியம் செலுத்தும் நபருக்கு இது உதவாது.  அவர் குடும்பத்து நபர்களின் ஜீவியத்திற்கு உதவும். இருப்பினும், வேதாகமம் சொல்வது எனனவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களும் மற்றும் தங்கள் வாழ்க்கையை தேவனுக்காக இழக்க விரும்புவோர் பயன் அடைவார்கள். ஆம், "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?"
(மாற்கு 8:35-36) உலகில் பல விஷயங்கள் உள்ளன, அவை நீடித்த வாழ்நாள் முழுவதும் தேவை, ஆனால் ஒரு தனிநபரை திருப்திப்படுத்தாது.

1) அழகு:
அழகாகவும் சௌந்தரியமாகவும் இருக்க விரும்புபவர்கள் அநேகர் உள்ளனர்.  அவர்கள் எல்லா வகையான அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்துகிறார்கள், குறிப்பிட்ட உணவை தான் சாப்பிடுகிறார்கள். ஒரு நாள் அவர்கள் தங்கள் சரீரத்தைக் கைவிட்டு தேவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.  ராணி கிளியோபாட்ரா, கழுதைப்பாலில் தினமும் குளித்து, சுருக்கங்கள் இல்லாத மிருதுவான சருமம் கிடைக்க முதலைகளின் கழிவை பொடி செய்து தடவினார்.

2) உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி:
நடனம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி என அனைத்து வகையான வேலைகளையும் செய்து தங்கள் உடலை நேர்த்தியாக வைத்திருக்க விரும்பும் அநேகர் உள்ளனர்.

3) செல்வம்:
வெகு சிலரே செல்வத்தைப் பின்தொடர்பவர்களாக இல்லை.  இன்னும் சிலர் எவ்வளவு செல்வத்தைப் பெறுகிறார்களோ, அதே அளவு விகிதாச்சாரமாகப் பெறுவதற்கான ஆசை கொள்கிறார்கள்.  எனவே, அவர்கள் அதிகமாக சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள் மற்றும் நல்ல பணம் பெருகி குவியும் போது இறக்கிறார்கள்.

4) அறிவு:
சிலர் அறிவைத் தேடுகிறார்கள்.  சிலர் பொது அறிவோடு நடக்கிறார்கள், வேறு சில துறைகளில் நிபுணர்களாக மாறுகிறார்கள்.  எல்லா அறிவும் ஞானமும் வாழ்க்கைக்கு அர்த்தத்தையோ நோக்கத்தையோ கொடுக்க முடியாது.  ஒரு விஞ்ஞானி படகில் செல்லும் போது கவிழ்ந்து விழுந்து, நீச்சல் திறமை இல்லாமல் ஏரியில் மூழ்கிவிடலாம்.

 பிலிப் ஜேம்ஸ் எலியட் (அக்டோபர் 8, 1927 - ஜனவரி 8, 1956) ஈக்வடாரில் ஹுவாரானி மக்களுக்குச் சேவை செய்ய மிஷனரியாகச் சென்ற நான்கு பேருடன் கொல்லப்பட்டார். தன்னால் இழக்க முடியாததைப் பெறுவதற்காக தன்னால் வைத்திருக்க முடியாததைக் கொடுப்பவன் முட்டாள் அல்ல என்பதாக கூறினார். 

நான் தேவ ராஜ்யத்திற்கான நாட்டம் கொள்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download