'ப்ரௌட் பாய்ஸ்' (பெருமை மிக்க இளைஞர்கள்) என்பது ஒரு பிரத்யேக ஆண் வட அமெரிக்க இளைஞர்களின் குழுவாகும், அவர்கள் தங்களை சூப்பர்-மனிதர்கள் என்றும் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகைகள் கொண்டவர்கள் என்றும் உலகில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் கூற்றுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை இரக்கமின்றி தடுப்பார்கள், மிரட்டுவார்கள் மற்றும் உடல்ரீதியாக கூட காயப்படுத்துவார்கள். அவர்களின் உலகக் கண்ணோட்டத்தின்படி, அவர்களுக்கென்று தனி சட்டம், தேசத்தின் அதிகாரிகளை மற்றும் சட்டங்களைக் புறக்கணிக்கிறார்கள், அதை மதிப்பதில்லை. ஓரினச்சேர்க்கை உறவுகளின் பாவமான வாழ்க்கை முறையைக் கொண்டாடுவதற்காக உலகின் பல நகரங்களில் பெருமை அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன. பாவமும் அவமானமும் பெருமையாகவும் ஆடம்பரமாகவும் மாற்றப்படுகின்றன. ஒரு சிறுவனோ அல்லது பெண்ணோ தனக்கு விருப்பமான ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால், உற்றார், உறவினர், குலம், ஜாதி ஆகியவற்றுக்கு இடையே சலசலப்பு ஏற்படுகிறது. அவர்கள் அந்த ஜோடியைக் கொல்வதன் மூலம் எதிர்வினையாற்றுகிறார்கள், இது கௌரவக் கொலை என்று அழைக்கப்படுகிறது, இது உண்மையில் ஆணவக் கொலை.
பெருமையும் வீழ்ச்சியும்:
ஆதாம் மற்றும் ஏவாளின் மனித வீழ்ச்சிக்கு முன், லூசிபரின் வீழ்ச்சி நடந்தது. அவனுடைய பெருமை தேவனின் மகிமையையும் ஆராதனையையும் விரும்பியது மற்றும் தேவனுக்கு மேலாக ஒரு உயர்ந்த சிம்மாசனத்தை விரும்பியது (ஏசாயா 14:12-17). கோடிக்கணக்கான மற்ற தேவதூதர்களுக்கு மேலாக, பிரதான தூதனாக, உயர்ந்த பதவியில் நன்றியுடன் இருக்க மறுத்துவிட்டான். எனவே, அவன் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான். "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!" (ஏசாயா 14:12).
அரசியல் பெருமை:
'ப்ரௌட் பாய்ஸ்' கூட்டம் மற்ற வெள்ளையர் அல்லாத மக்கள், நாடுகள் மற்றும் முழு உலகத்தின் மீதும் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த விரும்பினர். அனைவரும் அவர்களுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாகவும் நினைத்தனர். சமத்துவம் என்பது அவர்களுக்கு ஒரு கட்டுக்கதையாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
பாவப் பெருமை:
பாவம் மக்களை வெட்கப்படுத்துகிறது. இருப்பினும், சிலர் அவமானத்தை கௌரவமாகவும் பெருமையாகவும் மாற்றுவதில் ஒரு பிடிவாதமும் உறுதியும் கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் தங்களை அப்பாவி சிறுபான்மையினராகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் சித்தரிக்கிறார்கள், எனவே அவர்களுக்கு பாதுகாப்பு, சலுகைகள் மற்றும் பொது மரியாதை தேவை. மறைந்திருந்தவர்கள் நகரங்களில் ஊர்வலம் செல்லத் துணிந்தனர்.
கலாச்சாரப் பெருமை:
தாங்கள் தூய்மையானவர்கள் என்றும், மற்றவர்கள் தூய்மையற்றவர்கள் என்றும் நினைக்கும் கலாச்சாரம் இருக்கிறது. அப்படி அவர்களுடன் கலக்கும் எந்த உறவும் அவர்களை மாசுபடுத்தும். எனவே, ஒரு இளைஞன் குலம் அல்லது ஜாதிக்கு அப்பாற்பட்ட ஒரு பெண்ணைக் காதலித்தால், அது மாசு மற்றும் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஆகின்றது. அத்தகைய சேதம் கௌரவக் கொலையால் மீட்டெடுக்கப்படுகிறது. வெறுப்பும், கொலையும் மதிக்கப்படுகிறதாகவும் அதே வேளையில் அன்பு கெட்டதாகவும் மாறிப் போனது எவ்வளவு கொடுமை.
ஆவிக்குரிய பெருமை:
சிலர் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள், மற்றவர்களை எதிரிகளாகவும், முட்டாள்களாகவும், மூடர்களாகவும் நடத்துகிறார்கள்.
மனத்தாழ்மையும் நன்றியுணர்வும் என் வாழ்க்கையில் பழக்கமாக உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்