ஒரு கற்றறிந்த அதிகாரமுள்ள பெண் அரசியல்வாதி ஒரு மதத் தலைவரைச் சந்தித்தார். அவர் ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது சாதி மக்களை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று விருந்தினர்களுக்கு இருக்கை வழங்குவார். மேலும் அவர்களுக்கு மரியாதையுடன் சில பரிசுகளை வழங்கினார். மற்றவர்கள் அவர் முன்னிலையில் நிற்க வேண்டும், அவர் தனது அன்பளிப்பை பக்தர்களுக்கு வீசுவார். இது அரசியலில் ஒரு அலையை ஏற்படுத்தியது.
வருத்தம் என்னவெனில், சபைகளுக்குள்ளும் இதுபோன்ற சாதிப் பாகுபாடுகள் இருந்தன. சபைக்குள் சாதிகளுக்கிடையே தனி சுவர்கள் அல்லது தங்கள் தங்கள் சாதிகளுக்கென்று தனித்தனி சபைகள் இருந்தன. ஆனால் இப்போது, அந்த சுவர்கள் அகற்றப்பட்டன, ஆனால் கண்ணுக்கு தெரியாத சுவர்கள் உள்ளன.
அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதுகிறார்; “என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாய் இருப்பீர்களல்லவா?" (யாக்கோபு 2:1-4).
1) விசுவாச சான்று:
உண்மையான ஆவிக்குரிய ஜீவியமும் விசுவாசமும் தேவனின் பண்பைப் பிரதிபலிப்பதில் வெளிப்படுகிறது. தேவன் ஒருபோதும் பாரபட்சமோ அல்லது பட்சபாதமோ காட்டுவதில்லை. சீஷர்கள் தன்னை சுற்றியுள்ளவர்களை, பொதுவாக அனைத்து மனிதர்களையும் நேசிக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2) வேறுபாடுகள் வேண்டாமே:
மனித கண்ணோட்டத்தின் அடிப்படையில் வேறுபாட்டைக் காட்ட வேண்டாம் என்று யாக்கோபு சீஷர்களுக்கு அறிவுறுத்துகிறார். சாதி, குலம், வருமானம், கல்வி, பதவி, அதிகாரம், பாலினம், கலாச்சாரம், தேசியம், வயது, மொழி போன்றவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது.
3) தீய எண்ணங்கள்:
மற்றவர்களின் மீதான கோபம், அவமரியாதை தரும் மனப்பான்மை, குறிப்பிட்ட நபர்களுக்கு எதிரான தப்பெண்ணம், படிநிலை மனநிலை, வெறுப்பு, தான் உயர்ந்தவன் என்ற மனப்பாங்கு ஆகியவை தீய எண்ணங்கள்; அது பாகுபாட்டிற்கான சூழலையும் அதை தொடர்ந்து வன்முறைக்கான சூழ்நிலையையும் உருவாக்குகின்றன.
4) தீர்ப்பளி:
ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடுவது பாவம். பொதுவாக மனிதர்களால் மற்றவர்களின் எண்ணங்களையோ ஆழமான உணர்ச்சிகளையோ புரிந்து கொள்ள முடியாது, எனவே தீர்ப்பு தவறாக இருக்கும். மற்றவர்களை நியாயம் தீர்ப்பதை சீஷர்கள் விட்டுவிட்டு ஜனங்களை எப்படி மீட்டெடுக்கலாம், சரிசெய்யலாம் மற்றும் புதுப்பிக்கலாம் என்பதான காரணிகளைத் தேட வேண்டும்.
பாகுபாடு என்ற பாவத்திலிருந்து நான் விடுபட்டுள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்