1. ஒரு விசை மாத்திரம் நீதிசெய்யும் (ஆபிரகாம்)
ஆதியாகமம் 18:18-33 ஆபிரகாம்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப் பதாக; நான் இன்னும் இந்த ஒரு விசை மாத்திரம் பேசுகிறேன்; (50,40,30,20,10) நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு கர்த்தர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை (சோதோம், கொமோரா) அழிப்பதில்லை என்றார்.
2. ஒரு விசை மாத்திரம் மன்னியும் (பார்வோன்)
யாத்திராகமம் 10:1-18 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக் கும் விரோதமாய்ப் பாவம் செய்தேன். ஒரு முறை (விசை) மாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்த சாவைமாத்திரம் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்...
3. ஒரு விசை மாத்திரம் கட்டளையிடும் (கிதியோன்)
நியாயாதிபதிகள் 6:34-40 கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு விசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் மூளாதிருப் பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே விசை சோதனைபண்ணட்டும்; தோல் மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான். அப்படியே தேவன் அன்று செய்தார்
4. ஒரு விசை மாத்திரம் கற்பியும் (மனோவா)
நியாயாதிபதிகள் 13:1-18 மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: ஆ என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒரு விசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக் காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்ப்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான். தேவன் அவன் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்
5. ஒரு விசை மாத்திரம் நினைத்தருளும் (சிம்சோன்)
நியாயாதிபதிகள் 16:21-31 சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி, சிம்சோன் என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது.
Author: Rev. M. Arul Doss