நியாயாதிபதிகள் 6:34-40

6:34 அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,
6:35 மனாசே நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின் செல்லும்படி செய்து, அசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
6:36 அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால்,
6:37 இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
6:38 அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக்கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப்பிழிந்தான்.
6:39 அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
6:40 அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.




Related Topics


அப்பொழுது , கர்த்தருடைய , ஆவியானவர் , கிதியோன்மேல் , இறங்கினார்; , அவன் , எக்காளம் , ஊதி , அபியேஸ்ரியரைக் , கூப்பிட்டு , தனக்குப் , பின்செல்லும்படி , செய்து , , நியாயாதிபதிகள் 6:34 , நியாயாதிபதிகள் , நியாயாதிபதிகள் IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் IN TAMIL , நியாயாதிபதிகள் 6 TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 6 IN TAMIL , நியாயாதிபதிகள் 6 34 IN TAMIL , நியாயாதிபதிகள் 6 34 IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 6 IN ENGLISH , TAMIL BIBLE JUDGES 6 , TAMIL BIBLE JUDGES , JUDGES IN TAMIL BIBLE , JUDGES IN TAMIL , JUDGES 6 TAMIL BIBLE , JUDGES 6 IN TAMIL , JUDGES 6 34 IN TAMIL , JUDGES 6 34 IN TAMIL BIBLE . JUDGES 6 IN ENGLISH ,