காரியங்களை நடப்பிப்பவனா அல்லது வேடிக்கை பார்ப்பவனா?

பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குச் சென்றனர் (அப்போஸ்தலர் 3). அங்கு  அவர்கள் ஒரு ஊனமுற்ற மனிதனைப் பார்த்தார்கள், அவன் இவர்களிடம் ஒரு எதிர்பார்ப்போடு அணுகியதால் தங்களிடம் தங்கமோ வெள்ளியோ இல்லை என்று சொன்னார்கள்.  இருப்பினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சுகமளிக்கும் வல்லமையைக் கொண்டு அந்த மனிதனைக் குணமாக்கினார்கள்.  மேரி கே ஆஷ் இவ்வாறாக கூறினார்; சிலர் சீஷர்களை போன்று காரியங்களை நடப்பிக்கிறார்கள்;  மற்றவர்கள் என்ன நடந்தது என்பதைப் பார்க்கிறார்கள், சிலர் என்ன நடந்தது என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

1) நம்பிக்கையின்மை:

சிரிய இராணுவம் சமாரியா பட்டணத்தை முற்றுகையிட்டது (2 இராஜாக்கள் 7). முழு நகரமும் மிகவும் வறுமையில் இருந்தது, அவர்கள் தங்கள் சொந்த குழந்தைகளை சமைத்து சாப்பிடுமளவு நிலைமை இருந்தது.  அப்போது ராஜா எலிசா தீர்க்கதரிசியிடம் தீர்வு கேட்க வந்தான். கர்த்தர் சமாரியாவை விடுவிப்பார் என்றும் எல்லாப் பொருட்களின் விலைகளும் குறையும் என்றும் எலிசா ராஜாவிடம் கூறினார்.  ஆனால் அரசனுடன் இருந்த ஒரு அதிகாரி அதை நம்பாமல் எலிசாவை கேலி செய்தான்.  அதற்கு எலிசா, “உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய்" (2 இராஜாக்கள் 7:2) என்றார். அதனால் அவன் தேவனின் விடுதலையை அனுபவிக்க முடியவில்லை, "அந்தப் பிரகாரமாகத்தானே அவனுக்கு நடந்தது; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே அவன் செத்துப் போனான்" (2 இராஜாக்கள் 7:20).  இந்த மனிதன் உணவின்மைக்காகவா இறந்தான்; இல்லையே நம்பிக்கையின்மையால் அல்லவா இறந்தான்.

2) அலட்சியம்:

இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தபோது, ​​ஞானிகள் ராஜாவையும் இரட்சகரையும் தேடி எருசலேம் நகருக்கு வந்தனர்.  இந்த மனிதர்கள் பாலைவனங்கள், ஆறுகள், காடுகள், தைரியமான காட்டு மிருகங்கள், கொள்ளையர்கள், வெப்பம் மற்றும் சூரியன் மற்றும் பயணத்தில் அனைத்து வகையான சிரமங்களையும் கடந்து சென்றனர்.  ஏரோது இயேசு எங்கே பிறக்கப்போகிறார் என்பதை அறிய வேதபாரகர்களை வரவழைத்தார்.  சில நிமிடங்கள்/மணி நேரத்தில் இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்று இந்த வேதபாரகர்கள் பதில் அளித்தனர்.  இருப்பினும், அவர்கள் தங்கள் காலத்தில் நடந்த மாம்சமாகுதல் என்னும் பெரிய நிகழ்வைப் பற்றி அலட்சியமாக (கவனக்குறைவாக) இருந்தனர்.  அவர்கள் இரட்சகரைப் பார்க்க 5 மைல்கள் (8 கிலோமீட்டர்) பயணம் செய்யத் தவறிவிட்டனர்.  வேதபாரகர்கள் அலட்சியமாக வாழ்ந்து மடிந்தனர்.

3) விசுவாசம்:

சிலர் இந்த நிகழ்வுகளைப் பார்த்து, அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள், சீஷர்களின் நற்செய்தியை ஏற்று ஞானஸ்நானம் பெற்றார்கள்.

நான் காரியங்களை நடபிக்கும் வகையைச் சேர்ந்த நபரா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download