இறுதிதீர்ப்பு நாள் வெளிப்பாடு தீர்க்கதரிசிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் குறைவு. ஏனெனில் அவர்கள் தேவ தீர்ப்பை முன்னறிவித்தனர். வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசிகளும், கீழ்ப்படியாத இஸ்ரவேல் உட்பட, மனந்திரும்பாத, அகந்தையுள்ள, கலகக்கார மனிதகுலத்திற்கு எதிரான தேவ தீர்ப்பை அறிவித்தனர். "விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்" (எசேக்கியேல் 7:26). இளைஞர்கள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி இணையத்தளங்களில் மற்றும் சமூக ஊடகங்களிலும் சுற்றி வருவது ஒவ்வொரு நொடியும் பேரழிவு தரும், அதில் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் செய்திகளைக் கண்டறிகின்றனர். மறுபுறம், தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தினசரியும் ஏதோவொரு குற்ற செய்தியையே வெளியிடுகின்றன. அப்படிப்பட்ட செய்திகளை மட்டுமே பார்க்கும் பார்வையாளர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற உள்ளடக்கங்களை திரையில் தொடர்ந்து பார்ப்பது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கானது. ஆம், அது ஆவிக்குரிய வாழ்வில் தொடங்கி, பின்னர் மன வாழ்வில் ஊடுருவி, சரீரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆவிக்குரிய நலம்:
இப்படிப்பட்ட செய்திகளினால் சீஷர்கள் மனந்திரும்பி, இரக்கத்தை நாடி தேவனை நோக்கி செல்ல வேண்டும். இல்லையெனில், நீதியுள்ள லோத்தைப் போல, ஒரு நபர் கோபமாகவும், சோர்வாகவும், விரக்தியாகவும், மன உளைச்சலுக்கு ஆளாகவும், மனச்சோர்வடையவும் முடியும் (2 பேதுரு 2:7). சோதோமின் குடிமக்களின் அநீதியான, ஒழுக்கக்கேடான மற்றும் கொடுமையான செயல்களுக்கு லோத்து தினமும் சாட்சியாக இருந்தார். அவருடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது, அவருடைய நம்பிக்கைக்கு சவால் விடப்பட்டது. லோத் ஆபிரகாமுடன் ஐக்கியம் இல்லாதது, லோத்தின் ஆவிக்குரிய நல்வாழ்வு பாதிக்கப்பட்டது. டிஜிட்டல் ஆவிக்குரிய வாழ்வைத் தேர்ந்தெடுத்து, சபை ஐக்கயத்தைத் தவிர்க்கும் பல இளைஞர்கள் லோத்தைப் போலவே பாதிக்கப்படுகின்றனர்.
மன நலம்:
எதிர்மறையான செய்திகளைப் பார்ப்பதால் கவலை மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது, அதன் விளைவு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. அவநம்பிக்கையானது ஒரு நபரை மரணத்திற்கு நேராக இழுத்து செல்வது மட்டுமல்லாமல், தற்கொலைக்கு கூட தூண்டுகிறது. அப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்த லோத்தின் மகள்கள் சோதோமின் உலகக் கண்ணோட்டத்தை உள்வாங்கிக்கொண்டார்கள், ஆவிக்குரிய பகுத்தறிவு இல்லாமல் இருந்தார்கள். அவர்களின் கலாச்சார உலகக் கண்ணோட்டம் அவர்கள் தங்கள் சொந்த தந்தையுடன் உடலுறவு கொள்ளுமளவு தூண்டியது (ஆதியாகமம் 19:30-38).
உடல் நலம்:
செரிமான பிரச்சனைகள், தலைவலி, இதய நோய்கள், எடை அதிகரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை ஆவிக்குரிய மற்றும் மன ஆரோக்கியம் குறைவதால் ஏற்படும் சில விளைவுகளாகும்.
சமூக நலம்:
எதிர்மறையான செய்திகளை தொடர்ந்து எடுக்கும்போது (உட்கொள்வது) ஒரு நபரை சித்தப்பிரமை ஆக்கிவிடும். குடும்பத்தில் அல்லது சமூகத்தில் மற்றவர்களை நம்பும் திறன் குறைந்து விடும், அதாவது சாத்தியமற்றதாக்கி விடும். உறவுகள் வளர்க்கப்படாமல், எளிதில் முறிந்து விடும், அதுமட்டுமல்ல குடும்பத்திலும் சமூகத்திலும் மோதல்கள், சண்டைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.
நான் கிறிஸ்துவில் நம்பிக்கையை வளர்க்கிறேனா அல்லது சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்