யோவான் 12:12-13(12-16) இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டி கைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
யோவான் 12:14; சகரியா 9:9 சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார்
1இராஜாக்கள் 1:33,38 ராஜாக்கள் ஏறும் கோவேறுகழுதை
(கோ- அரசன், ஏறு-ஏறுகிற)
மத்தேயு 21:1-9 இஸ்ரவேலின் ராஜாவாகிய இயேசு வரும்பொழுது வஸ்திரங்களை விரித்தார்கள், மரக்கிளைகளையும் தறித்து பரப்பினார்கள்.
வெளிப். 7:9-12 பன்னிரண்டு கோத்திரங்களும், திரளான ஜனங்களும், வெள்ளை அங்கிகளைத் அணிந்து குருத்தோலைகளைப் பிடித்து தேவனை யும், ஆட்டுக்குட்டியானவரையும் தொழுதுகொண்டு ஆர்ப்பரித்தார்கள்.
சகரியா 9:9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும், தாழ்மையுள்ளவரும்...
1. நீதியுள்ளவர்
அப்போஸ்தலர் 3:14-15 பரிசுத்தமும், நீதியுமுள்ளவரை கொலைசெய்தீர்கள்
1தீமோத்தேயு 3:16 ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார்.
1பேதுரு 3:18 நீதியுள்ளவராய் பாவங்களுக்காக பாடுபட்டார்.
2. இரட்சிக்கிறவர்
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வெறொருவராலும் இரட்சிப்பில்லை
1தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தார்.
லூக்கா 19:10 இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுவே இயேசு வந்தார்
3. தாழ்மையுள்ளவர்
மத்தேயு 11:29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்
பிலிப்பியர் 2:8 சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்.
Author: Rev. M. Arul Doss