டிஜிட்டல் தொடர்பு புரட்சியானது பல இலவச சமூக ஊடக தளங்களை உருவாக்கியுள்ளது. அவை பிரபலமானவை மற்றும் பலரால் பயன்படுத்தவும் படுகின்றன. ஸ்மார்ட்போன் மற்றும் தரவு இணைப்பு உள்ள எவரும் உலகளாவிய பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதால், தகவல் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மறுபுறம், இது மற்றவர்களை ட்ரோல் செய்யும் அல்லது இழிவுபடுத்தும் மற்றும் சூரியனுக்குக் கீழே உள்ள ஒவ்வொரு விஷயத்திலும் முட்டாள்தனமான கருத்துக்களைக் கொடுக்கும் மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. "மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்" (நீதிமொழிகள் 18:2).
மகிழ்ச்சி இல்லை:
ஒரு புத்திசாலி நபர் அறிவு, புரிதல் மற்றும் ஞானம் ஆகியவற்றில் மிகுந்த திருப்தியைப் பெறுகிறார். ஆனால், முட்டாள்களோ மகிழ்ச்சியோ அல்லது உற்சாகமோ அல்லது புரிந்து கொள்வதில் ஆர்வமோ எடுப்பதில்லை. அவர்கள் உயிரோடு இருக்கும் காலம் வரை கற்றுக் கொண்டே தான் இருப்பார்கள்.
கருத்தை வெளிப்படுத்துதல்:
ஆயினும்கூட, அவர்கள் ஏதோ நியமிக்கப்பட்ட நிபுணர்கள் போல் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளனர். அதாவது வெறுமனே தெருக்களில் நின்று குடிகாரன் எப்படி தானாக உளறுவானோ அதுபோலவே இந்த முட்டாள்கள் இணையத்தளம் அல்லது வலைத்தளத்தில் தெரிந்தது தெரியாதது, உண்மையோ பொய்யோ எதையும் தீர விசாரிக்காமல் இணையத்தளத்தில் தகவல்களை தடுமாற்றத்தோடு பகருகிறார்கள்.
பெருமை:
அவர்கள் தங்கள் சொந்த பார்வையின்படி புத்திசாலிகள். 'தெரிந்தது கையளவு, தெரியாதது உலகளவு' என்ற தமிழ் பழமொழிக்குப் ஏற்ப, தாழ்மையானவர்கள் அறிவின் வரம்புகளை உணர்கிறார்கள்.
எனக்கு தெரியும்:
அவர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துகள் நியாயமானவை அல்ல, அர்த்தமற்றவை. ஆனால் வார்த்தைகளைக் கோர்த்து எல்லாம் தெரிந்தது போல், புரிந்தது போல செய்கிறார்கள். மற்றவர்களை விட அவர்கள் அதிக அறிவாளிகள் அல்லது புத்திசாலிகள் என்று மக்களைக் கவர வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அனைவரும் கேட்க வேண்டும்:
சுவாரஸ்யமாக, எல்லோரும் கேட்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், அதே நேரத்தில் அவர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்க விரும்புவதில்லை. கூடுதலாக, அவர்கள் தங்கள் செய்திகளைப் புறக்கணிப்பவர்களைக் கண்டிக்கின்றனர்.
கற்பிக்கும் திறன் குறைவு:
முட்டாள்கள் ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால் அவர்கள் முட்டாள்தனத்தால் நிறைந்திருக்கிறார்கள். மேலும், அவர்களது சொந்தக் கருத்துகளையும் தவறான முடிவுகளையும் அவர்களால் அறிய முடிவதில்லை.
சீஷனின் ஒழுக்கம்:
ஒரு சீஷன் தேவன் சொல்வதைக் கேட்க கவனமுள்ள காதுகளையும், தெய்வீகத் தலைவர்களையும், ஞானத்தில் வளர ஆசிரியர்களையும் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் வரம்புகளை ஒப்புக்கொள்வதற்கு தாழ்மையானவர்கள் மற்றும் கோரப்படாத கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லை, ஆனால் உண்மையைப் பிரகடனம் செய்கிறார்கள்.
ஒரு சிஷ்யனாக எனக்கு கற்றல், பகுத்தறிதல் மற்றும் பகிர்தல் போன்ற ஒழுக்கம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்