உணவு விநியோகம் செய்யும் ஏஜெண்ட் உண்மையில் ஒரு அடிமை எனலாம். பிடித்தமான உணவகத்திலிருந்து ஆர்டர் செய்யும் உணவை, ஒரு பையனோ அல்லது ஒரு பெண்ணோ ஆர்டர் செய்தவர்களிடம் நேரத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். வருத்தம் என்னவெனில், அவர்கள் படித்திருந்தாலும், அவர்கள் குறைந்தபட்ச சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். அதிலும் இந்த வேலைக்கு தேவையான இருசக்கர வாகனம், ஸ்மார்ட்போன் என அவர்களிடம் இருந்தால் மட்டுமே வேலைகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நிச்சயமற்ற எதிர்காலம் கொண்ட வேலைக்கு இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த பரிதாபத்திற்குரிய தொழிலாளர்களைச் சுரண்டுகிறார்கள் மற்றும் அவர்களின் செல்வத்தை அதிவேக விகிதத்தில் பெருக்குகிறார்கள். இப்படிப்பட்ட சுரண்டல்கள் பற்றி வரலாறு முழுமையும் நம்மால் காண முடியும்.
ஆளோட்டிகள்:
சில நவீன கால ஆளோட்டிகள் (பணி நியமனம் செய்பவர்கள்) போன்று எகிப்திய பணி நிர்வாகிகள் செங்கலை அறுப்பதற்கு தேவையான உபகரணங்களை வழங்க மறுத்துவிட்டனர் (யாத்திராகமம் 5:6-20). ஆனால் இஸ்ரவேலரை சோம்பேறிகள் என்று குற்றம் சாட்டினர். உண்மை என்னவெனில், அவர்கள் கடினமான உழைப்பாளிகள், பிரமிடுகள் உட்பட கம்பீரமான பழங்கால கட்டிடங்களை இஸ்ரவேலர்கள் அல்லவா கட்டினார்கள்.
பிழைக்க வேண்டிய நிர்பந்தம்:
எகிப்திய ஆட்சியாளர்கள் அடிமைகளின் இலவச சேவையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினர். "இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது" (யாக்கோபு 5:4). தொடர்ச்சியாக கடின உழைப்பின் அழுத்தத்தில் அவர்களை வைத்திருக்கும்போது நல்ல உழைக்க வேண்டும் என்பதை தாண்டி அவர்கள் பிழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அவர்களின் விருப்பமெல்லாம், அடிமைகள் உணவைப் பற்றியும் உயிர்வாழ்வதைப் பற்றியும் மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பதே.
கனவு லட்சியங்களுக்கு தடை:
அடிமைகளுக்கு இலவச நேரத்தை அனுமதித்தால், அவர்கள் கனவு காண்பார்கள், ஆசைப்படுவார்கள். இத்தகைய ஆர்வங்கள் ஒரு சுதந்திர இயக்கத்தைத் தூண்டலாம். செயலற்ற உடலும் மனமும் ஒரு பிசாசின் பட்டறை, அது அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கை சீர்குலைக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
சுதந்திரத்திற்கு வாய்ப்பு இல்லை:
ஒடுக்குமுறையாளரின் உத்தி சுதந்திரத்திற்கான எந்த வாய்ப்பையும் அனுமதிக்கக் கூடாது. மேலும் அவர்கள் தேவனுக்கு அடிமைகள், மனிதர்களின் அடிமைகள் அல்ல என தேவனைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்த மோசே மற்றும் ஆரோன் மீது அவர்கள் கோபமடைந்தனர். இத்தகைய கருத்துக்கள் அவர்களின் அரசியல் சலுகைக்கும் பொருளாதார லாபத்திற்கும் ஆபத்தானவை. ஆம், கருத்துக்கள் சமூகங்களையும் நாடுகளையும் மாற்றும். அதனால், இந்தியா உட்பட மிஷனரிகளின் கல்விப் பணியை பல நாடுகள் வெறுத்தன. தற்போது, சில பள்ளிகள், ஏழைகளின் கல்வியை பறிக்கும் கால்நடை கொட்டகைகளாக மாறியுள்ளன.
யோபு ஓர் உதாரணம்:
“என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால், தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன். தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவளையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்திலே எங்களை உருவாக்கினார் அல்லவோ?" (யோபு 31:13-15). ஆம், யோபு தாராள மனப்பான்மையும் இரக்க குணமும் நியாயமுமானவன்.
யோபுவைப் போன்ற மனப்பாங்கு மற்றவர்களிடம் நான் கொண்டிருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்