தினமும் நம் தலையணை, சீப்பு மற்றும் குளியலறை தளங்களில் கொத்து கொத்தாக தலைமுடி உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அதன்மீது கவனம் செலுத்தி மறுமுறை பார்க்க நாம் விரும்புதில்லை. நம்மில் பெரும்பாலானோருக்கு, உதிர்ந்த முடி என்பது கழிவு, குப்பை மற்றும் அழுக்கு. மேலும் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ வழங்கப்படும் உணவில் உதிர்ந்த முடி கிடப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். முடியின் நிறத்தைப் பற்றி கவலைப்படுபவர்களும் உள்ளனர்.
உன்னிப்பான அக்கறை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம், நம் பரலோகத் தகப்பன் நம்மைப் பற்றிய எல்லா தரவுகளையும் வைத்திருக்கிறார் என்றும் அதிலும் குறிப்பாக தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது என்று கற்பித்தார் (லூக்கா 12:7 மற்றும் மத்தேயு 10:30). ஒரு பருவமடைந்த மனிதனின் உடலில் சுமார் 5 மில்லியன் முடிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர், அவற்றில் 100000 மட்டுமே உச்சந்தலையில் உள்ளது. நம் முடி தொடர்ந்து வளர்ந்து உதிர்கிறது. அப்படியென்றால் தேவன் நம்மை நொடிக்கு நொடி பார்த்துக் கொண்டிருக்கிறார். மிகவும் அன்பான மற்றும் நெருக்கமான வாழ்க்கைத் துணைக்கு தன் துணையின் முடிகளின் எண்ணிக்கை தெரியாது. நிச்சயமாக, இது எண்ணுவதற்கு மனித திறனுக்கு அப்பாற்பட்டதுமாகும். தேவ அன்பு, நெருக்கம் மற்றும் அக்கறை ஆகியவற்றின் உண்மை வெளிப்படுத்தப்பட்டு, நம் தலைமுடியை நாம் கணக்கிடும் விதத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தவறான கட்டுக்கதை:
ஒரு பொதுவான கட்டுக்கதை என்னவென்றால், நாம் கவலைப்படும்போது முடி உதிர்கிறது என்பதாகும். ஆனால், கவலை என்பது தேவனின் நன்மை, மகத்துவம், உண்மைத்தன்மை மற்றும் கிருபை ஆகியவற்றில் விசுவாசம் இல்லாமல் இருப்பதாகும். நாம் இந்த சத்தியத்தை உணர்ந்து அதற்காக நன்றியுள்ளவர்களாக உள்ளோமா?
அர்த்தமுள்ள கவனிப்பு:
பேதுருவை சிறையிலிருந்து மீட்டு விடுவிக்க தேவன் ஒரு தூதரை அனுப்பினார். தேவதூதனோ அவனைக் காப்பாற்ற அவசரப்படவில்லை. இது உண்மையான மென்மையான கவனிப்பு. முதலில், பேதுரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தேவதூதன் அவனை எழுப்ப வேண்டும். இரண்டாவதாக, அவன் இரவு உடையில் இருந்ததால் அரை கச்சை கட்டும்படி அறிவுறுத்தப்பட்டான். மூன்றாவதாக, அவன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள்ள வேண்டும். நான்காவதாக, அவன் தனது மேலங்கியை (வஸ்திரத்தை) அணிய வேண்டும் (அப்போஸ்தலர் 12:8).
மனதார அக்கறை:
"என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது?" (சங்கீதம் 56:8). ஆம், ஆண்டவர் நம் அலைச்சல்களை அறிந்திருக்கிறார், நம் கண்ணீரை துருத்தியில் வைத்திருக்கிறார். படுக்கையில் எத்தனை முறை திரும்புகிறோம்? எந்த நோக்கமும் இல்லாத பயனற்ற பயணங்கள்? மெல்லிய துணி இழைகள் கண்ணீரை உலர்த்துகின்றன, ஆனால் அவரது பார்வையிலும் பதிவுகளிலும் பதியப்பட்டுள்ளது என்பதை நினைவில் வைப்போம்.
கர்த்தர் கவனிக்கிறார் என்பது மேலோட்டமானது; அவர் மிக நுணுக்கமாக நம்மை அறிகிறார்.
இந்த அக்கறையுள்ள எஜமானனுக்கு நான் நன்றியுள்ள நபராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்