தேசத்தின் நலனுக்காக நிலம் அல்லது பிற வளங்களை தேசம் எடுக்க அனுமதிக்கும் சட்டங்கள் பல நாடுகளில் உள்ளன. தங்களுக்கு கடினமாக இருந்தாலும் குடிமக்கள் தேசத்தின் நலனுக்காக கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குடிமக்கள் என்ற முறையில் தேசத்தின் நலன் அல்லது முன்னேற்றத்திற்காக வழங்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. அது போல, தேவ ராஜ்யத்திற்காக, ராஜ்யத்தில் உள்ள சில குடிமக்கள் ராஜ்யத்தின் மிகப்பெரிய நோக்கம் மற்றும் நலனுக்காக கொடுக்க, தியாகம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
எந்த ஒரு காரணமும் இல்லாமல், துன்பத்தை அனுபவிக்கும் பல தெய்வீக மக்கள் உள்ளனர். ஒரு வயதான பெண் பன்னிரெண்டு வருடங்களாக கோமா நிலையில் இருக்கிறார். மற்றொரு தம்பதியினர் மூளை காய்ச்சலால் தங்களின் ஒரே மகளை இழந்தனர். ஏமி கார்மைக்கேல் ஒரு விபத்துக்குப் பிறகு படுத்த படுக்கையானார், இருபது வருடங்கள் ஊழியம் செய்தார்.
பொதுவாகவே ஒவ்வொரு நபரின் சிந்தனை, தன்னை மையத்தில் வைத்திருப்பதும், தன்னைச் சுற்றி மற்றவர்களுக்காக ஒரு வெளிவட்டத்தை உருவாக்குவதும் ஆகும். இந்த முறை பல விசுவாசிகளின் தனிப்பட்ட ஜெபத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட ஜெபம் 'என் அல்லது எனக்கு' என தொடங்குகிறது, பின்னர் தன் சொந்த குடும்பம், விரிவடைந்த சொந்தங்கள், உறவினர்கள், சக விசுவாசிகள், நண்பர்கள், மிஷனரிகள், ஊழியர்கள், அதிகாரம் உள்ளவர்கள், பிற தேசிய மற்றும் உலகளாவிய தேவைகள் என்பதாக செல்கிறது. ஆக, சிந்தனையானது ‘என்னை’ மையமாகக் கொண்டு தொடங்குகிறது
இருப்பினும், தேவன் ஒரு வித்தியாசமான சிந்தனை முறையை எதிர்பார்க்கிறார். முதல் மற்றும் முதன்மையானது தேவ ராஜ்யம். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:33). இந்த சிந்தனை செயல்பாட்டில் பார்ப்போமேயானால் கடைசி மற்றும் குறைந்தபட்சம் என்பது 'எனக்கு அல்லது என் அல்லது என்னை' என்பது தான். இது பொதுவான சிந்தனை முறைக்கு எதிரானது. இந்த சிந்தனை வரிசை கர்த்தருடைய ஜெபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெபம் தேவ சித்தத்திற்கும், உணவு உட்பட அன்றாட மனிதனின் தேவைகளுக்கும் மேலாக தேவராஜ்யத்தை வைக்கிறது.
தேவன் மற்றும் அவரது இறையாண்மை ஆட்சியின் முன்னுரிமை மற்றும் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள ராஜ்ய சிந்தனை நமக்கு உதவுகிறது. நமது தேவையை விட ராஜ்யத்தின் தேவை அதிகமாகிறது, எனவே முன்னுரிமைகளும் உள்ளன.
நம் வாழ்க்கையில் தனிப்பட்ட ஜெபங்களின் வரிசையை, அதாவது அந்த முறையை நாம் மாற்ற வேண்டும், அது தேவ கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது. அவருடைய ராஜ்யத்தில் தொடங்கி, நமது தேசம், நாம் வாழும் நகரம் (எரேமியா 29:7), உள்ளூர் சபை, நம் தொழில்முறை அமைப்பு, நண்பர்கள், பின்னர் குடும்பம் மற்றும் சுயம் என்பது கடைசியாகவும் நம் ஜெபம் இருக்க வேண்டும்.
எனக்கு தேவராஜ்ய சிந்தனை முறை உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்