ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த (தலித்) ஒரு வாலிபனை அவனது வீட்டில் புகுந்து வெட்டிக் கொல்ல முயற்சித்தனர், அதைத் தடுக்க வந்த அவனுடைய தங்கையும் தாயும் பலத்த காயமடைந்தனர்; வீடு முழுக்க இரத்தம் என பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தமிழ்நாட்டின் நாங்குநேரியில் ஒரே வகுப்பில் படித்த 16 அல்லது 17 வயதுள்ள ஆறு சிறுவர்கள் (செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆகஸ்ட் 12, 2023). அதாவது பாதிக்கப்பட்டவர் தனது படிப்பில் சிறந்து விளங்கினார், மேலும் ஆசிரியர்கள் அவரைப் பாராட்டி அனைவரிடமும் முன்மாதிரியாகக் காட்டினார்கள். சமூகத்தில் ஒரு தாழ்ந்த சாதிப் பையன் எப்படி அவர்களைவிடச் சிறப்பாகச் செயல்பட முடியும்? அவனை ஒரு உத்வேகமாக மற்றும் தங்களுக்கு ஒரு முன்மாதிரியாக காண்பதற்கு பதிலாக, பொறாமை, ஆத்திரம் மற்றும் கொலை போன்ற காரியங்கள் உள்ளத்தில் குடியேறியது. ஆபேலின் காணிக்கை கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் காயீன் ஆபேல் மீது கோபம் கொண்டான் (ஆதியாகமம் 4).
ஆவிக்குரிய ரீதியிலான கண்ணோட்டம்:
காயீன் துன்மார்க்கனாக இருந்தபோது ஆபேல் நீதியுள்ளவனாக இருந்தான் (மத்தேயு 23:25). காயீன் யோசித்தான்; இளைய, தாழ்ந்த, பலவீனமான ஆபேலை தேவன் எப்படி அங்கீகரிக்க முடியும்? தலித்துகள் ஆவிக்குரிய உரிமைகளான ஆராதனை மற்றும் ஐக்கியம் ஆகியவற்றிலிருந்தும் பறிக்கப்பட்டுள்ளனர்.
கல்வியியல் கண்ணோட்டம்:
பல நூற்றாண்டுகளாக தலித்துகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது, இதனால் அவர்கள் மற்ற சாதியினருக்கு இலவசமாக தொண்டூழியம் செய்ய வற்புறுத்துப் பட்டனர். படிப்பறிவில்லாதவர்களாக இருப்பதால், அவர்கள் எளிதில் சுரண்டப்பட்டு அடிமைப்படுத்தப்படலாம். ஆனால் மிஷனரிகள் அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை எளிதாக்கினர்.
பொருளாதாரக் கண்ணோட்டம்:
தலித்துகள் வேலைக்காக அல்லது வாழ்வாதாரத்துக்காக மற்ற சாதிகளைச் சார்ந்து இருந்தனர். அவர்கள் படித்தவுடன், வேலைக்காகவும், சம்பாதிக்கவும் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இது எப்படியெனில், எகிப்தியர்களுக்கு இஸ்ரவேலர்கள் சேவை செய்தது போல உயர் சாதியினருக்கு தலித்துகளின் இலவச சேவைக் காணப்பட்டது.
சமூக கண்ணோட்டம்:
படிநிலை சாதி அமைப்பு உயர்மட்ட உயரடுக்கு சாதியினருக்கு அனைத்து சலுகைகளையும், அதே அடுக்கின் கீழ் அல்லது அடிமட்ட பகுதியில் இருப்போருக்கு அனைத்து கடமைகளையும் வழங்குகிறது. உயர்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள், இந்த இறுக்கமான கட்டமைப்பில் கீழ் உள்ளவர்களிடம் மரியாதை, இலவச சேவைகள், அடிபணிதல், சமர்ப்பணம், தியாகம், விசுவாசம் மற்றும் வாழ்க்கையைக் கூடக் கோருகின்றனர். அதற்கு இணங்காமல் அவமதித்தாலோ அல்லது கீழ்ப்படியாமல் போனாலோ மரணம் உட்பட கடுமையான தண்டனை கிடைக்கிறது.
அரசியல் கண்ணோட்டம்:
ஜனநாயக ஆட்சி முறை உயர் சாதியினருக்குப் பிடிக்கவில்லை. ஜனநாயகத்தில் ஒரு நபர், ஒரு வாக்கு என்பதே.
கலாச்சாரக் கண்ணோட்டம்:
துரதிர்ஷ்டவசமாக, இது பொறாமையை வளர்க்கும் கலாச்சாரம். தொலைக்காட்சிக்கான விளம்பரம் ஒன்று இப்படியாக; "உரிமையாளரின் பெருமை மற்றும் அண்டை வீட்டாரின் பொறாமை". "சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி" (நீதிமொழிகள் 14:30) என வேதாகமம் கூறுகிறது. இது ஒரு நபரின் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் இழக்கச் செய்கிறது, மேலும் ஆத்திரம், வன்முறை மற்றும் கொலைக்கு அதிகரிக்கிறது.
நான் என் தேசத்தில் நீதியை முன்மொழிகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்