தொடர் - 5
எதிர்பாராமல் தன் தோழியைக் கண்டஜாய்ஸி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஏனெனில் தனராஜ் தனிக் கடை வைத்து பணம் அதிகமாகப் புரளவும், வேறு இடத்திற்கு தன் வீட்டையும் மாற்றிவிட்டார். கவிதா, ஜாய்ஸி இருவரும் வேலைக்குப் ஆரம்பித்துவிட்டதால், தனராஜின் கண்டிப்பும், நேரமின்மையும் இரு தோழியரின் சந்திப்பு நடைபெறாமல். இருந்தது. ஈராண்டுக்குப்பின் வீடு தேடி வந்த கவிதாவைக் கண்ட ஜாய்ஸிக்கு மகிழ்ச்சியிருக்காதா என்ன ?
கவிதா! எவ்வளவு நாளாச்சு நாமிருவரும் நன்றாகப் பேசி! எப்படி வந்த? ஆபீஸ் முடிந்ததும் நேரா இங்கே வந்துட்ட போல இருக்கே! லேட்டாக வீட்டுக்குப்போனா, அப்பா திட்டமாட்டாரா?'” சரமாரியாகக் கேள்விகள் கேட்டாள்.
“ஏய், ஜாய்ஸி, கொஞ்சம் மூச்சு விட்டுத்தான் கேளேன் மடமடவென்று கேட்கிறாய் அப்பா கடையைவிட்டு வர 11 மணியாகும் உன்னைப்பார்த்து ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து பேசனும்னு நினைச்சேன். வந்தேன் சரி, அண்டி எங்கே?”
பக்கத்து தெருவிலுள்ள பாக்கியம் பாட்டிக்குச் சு௧மில்லை போயிருக்கிறார்கள்.
“ரொம்ப நல்லதாப் பேச்சு உன்கிட்ட ஒரு சீக்கரட், நியூஸ் சொல்லணும்” தரையை அவள் விழிகள் பார்த்தன, அவள் முகம் சிவந்தது. முகையவிழ்ந்த மலர் போல் அவள் வதனம் மின்னியது. அவளை உற்றுப் பார்த்தாள், ஜாய்ஸி, கவிதாவின் முகத்தில் பழைய குழந்தைத்தனமான குறும்புச் சிரிப்பு இல்லை ஏதோ ஒரு மாற்றம் அவளுக்குப் புரியவில்லை.
அப்படி என்னடி சீக்கரட் நியூஸ்?
ஜாய்சி! எங்க ஆபீசில்... ராஜாசேகர் என்று ரொம்ப நல்லவர். ஆனால் ஹார்ட் வீக் பேஷன்ட் ஒரு நாள் ஆடிட்டிங்க்காக வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அட்மிட் செய்து ட்ரிட்மெண்ட் எடுத்தாங்க, இப்போது நல்லா இருக்கிறார்.
நான் முன்பெல்லாம்' அவரோடு, ஏன் யாரோடும் அவசியம் இல்லாமல் பேச மாட்டேன். ஆனால், சுகவீனத்தின் போது மனிதாபிமானத்தால் உடல்நிலை பற்றி விசாரித்தேன், அவருக்கு அடுத்த முறை ஹார்ட் அட்டேக் வந்தால் இறந்து விடுவார் என்று டாக்டர் சொன்னதாக யாரோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதை என்னிடம் சொன்னார். எனக்கு பகீரென்றது. இப்படி ஒரு செய்தியை யாராவது நோயாளிடம் போய் சொல்லுவார்களா? நான் மன தைரியம் அளிக்கும் வகையில் “மருத்துவத்திற்கு மிஞ்சியது தேவச் செயல் என்பது பற்றி அவரிடம் பேசினேன். மிக ஆவலாகக் கேட்டார். இந்த ஆரம்பம்””.... நிறுத்தினாள் கவிதா.
அதுவரை பொறுமையாக இருந்த ஜாய்ஸி “காதல்,கத்தரிக்காய் என்று போய்முடிந்துள்ளதாக்கும்
ஜாய்ஸியை நிமிர்ந்து: பார்த்த கவிதா மெளனமாகி குனிந்து கொண்டாள். பின் நான் அவர் அழகைக்கண்டு விரும்பவில்லை. அவருக்காக பாஸ்டிங் இருந்து ஜெபித்தால், பலவீனப்பட்ட ஒருவர் சுகமடைவதோடு இயேசுவின் மந்தையில் ஒர ஆடு சேரும் ஒரு உயிரை வாழ வைத்தது போலவும் இருக்குமல்லவா?”
“பைத்தியக்காரி! வாலிபத்தின் மாயை இது! இன்றைக்கு கவிதா ... நாளைக்கு சரிதா என்று மாறினாலும் ஆச்சரிமில்லை நீ எதையாவது கனவு கண்டு ஏமாறாதே.
“இல்லை ஜாய்! அவர் ரொம்ப நல்லவர். என்னை அதிகம் நேசிக்கிறார்.”
“பைபிளில் 2 சாமுவேல் 13ஆம் அதிகாரத்தை வீட்டிற்குப் போய் 3 முறைபடி, தாமாரின் மேல் அம்னோன் கொண்ட அன்பால் அவன் நாளுக்கு நாள் மெலிந்து போனான். அவ்வளவு அதிகமாய் அவன் அவளை நேசித்தான் என்ன நடந்தது?”
“ஜாய்! தாமார் அவனோடு தனியறைக்கு ஏலி போனாள்? எல்லோரையும் வெளியே போகச் சொல்லி இவளை தனியே அறை வீட்டுக்குள் அழைக்கும் போது அவள் போனது தவறுதானே!
ஏன் போனாள் தெரியுமா? நீ சொன்னாயே அதே காரணம், இரக்கம்! தன் சகோதரனுக்கு வியாதி நண்பனின் தவறான ஆலோசனைப்படி அம்னோன் செய்த சூழ்ச்சியால் அப்பாவின் கட்டளைப்படி தாதாமார் அவன் வீட்டிற்குச் சென்று அவன் சாப்பிட உணவு தயாரித்தாள். அது தவறா? வியாதிக்காரன் எப்படியாவது சாப்பிட்டால் போதும் என அறை வீட்டிற்கும் சென்றாள். அவனது தவறான எண்ணத்தை புரிந்து கொள்ளவும், எவ்வளவு புத்தி சொன்னாள்! நடந்தது என்ன? நெருப்பில் வீழ்ந்த பஞ்சு தப்ப முடியுமா?”
"ஜாய் என் வாழ்க்கை அது போன்றது அல்ல. நான் தனியே எங்கும் அவரை சந்திப்பதில்லை அப்படி அழைத்தாலும் நிச்சயமாக போக மாட்டேன். எனவே நீ நினைப்பது போன்ற அசம்பாவிதம் நடைபெறாது !
“எந்த ஆண்மகனுக்கும் என் உள்ளம் இல்லை. நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன் என்று கூடத்தான சொன்னாய், இப்பொழுது நடந்தது என்ன? கவிதா இது ஆரம்பம், சறுக்கில் கால் வைத்தால் மடமடவென்று சறுக்கி கீழே போய் விழுவோமே தவிர இடையில் நிற்போம் எனச் சொல்ல முடியாது நாள் ஆக ஆக இவரைத்தான் மணந்து கொள்ளப் பேகிறேனே! என்னை ஒரு போதும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை ஆழமாக விழும் அழைப்பிற்கிணங்கிடுவாய்! ஜாக்கிரதை! வண்டு மலரைச் சுற்றி வட்டமிடுகிறது. தேன் அருந்தியதும் பறந்துவிடும். 2 சாமு 19:15 ப்படி, அவளை நுகர்ந்தபின் அவளை வெறுத்தான். அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும் அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. மலர் கசங்கியபின் அதக் தூக்கிதான் எறிவார்களே தவிர அதற்காக கவலைப்படுவார் யாரும் இருக்கமாட்டார்கள்.”?
என்னால் அவரை மறக்கமுடியவில்லை. ஏனென்றால் புறக்கணித்தால் அவர் இறந்து விடுவாரோ என பயப்படுகிறேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! எனக்காக ஞானஸ்நானம் எடுப்பார். கிறிஸ்தவனாக மாறுவார். என நம்புகிறேன்”
இந்தக் காரியத்திற்காக உபவாசித்து ஜெபம் செய் ஆண்டவர் ஒரு வழிகாட்டுவார்; அவருடைய பெற்றோரை வந்து உன் தந்தையைப் பார்த்து திருமண காரியம் ஒழுங்குபடுத்தும்படி ஏற்பாடு செய்யச்சொல்!'”
“ஜாய்! அப்பா, தம்பிமெடிக்கல் காலேஜ் முடிக்கும் முன் எனக்கு மேரேஜ் செய்ய மாட்டார் அதோடு என்னை மிகவும் வெறுக்கிறார்.
கவிதா! உன்னை சீராட்டிபாராட்டி இத்தனை ஆண்டுகள் வளர்த்த உன் தந்தையே மாறிவிட்டார் என்றால் நேற்று வந்த யாரோ ஒருவன் மாறமாட்டான் என்பது என்ன நிச்சயம்? கவிதா! காதல் என்பது கள். அதுமதியை மயக்கி உளற வைக்குமே தவிர ஒன்றுக்கும் உதவாது. உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு ஆனால் சுண்ணாம்பு சேர்ந்த பதனீர் போன்றது திருமணம் தேவனால் இணைக்கப்படும்போது தேவன் குடும்பத்தின் மையமாக தலைமை இருந்து நடத்துகிறார் அன்பினால் இணைந்து வாழும் அந்த இல்லறம் நல்லறமாகத் திகழ்கிறது உடலும் உள்ளமும் ஆத்துமாவும் ஆரோக்கியமான ஆண்டவனின் அன்பு ஆலயமாகிறது இந்தத் தொடர்பை நீ விட்டுவிடுவதே நல்லது”
என்னால்முடியாதே ஜாய்ஸி ! எனக்குதைரியமே இல்லை”? வாசலில் காலடிசத்தம் கேட்டது உள்ளே வந்த மேரி அம்மா,
வாம்மா கவிதா எப்படா வந்தே? அம்மா தம்பி தங்கை எல்லா சுகமா இருக்காங்களா? ஜாய் கவிதாவிற்கு டிபன் கொடுத்தாயா?
ஸ்தோத்திரம் ஆண்டி எல்லாரும் நல்ல சுகம்”
நான் எங்க கொடுக்க வளவள என்று வம்பளந்து கொண்டிருந்தாள், ஜாய்ஸி சிரித்தாள்.
இருடா கவிதா நான் காபி போடறேன் ரொம்ப களைப்பா இருக்கேடா”
இல்லை ஆண்டி இன்னொரு நாள் வர்றேன் ரொம்ப நேரமாயிரிச்சு போயிட்டு வரேன்! வரேன் ஜாய்! வேகமாக படியில் இறங்கி நடந்தாள் அவள் மனம் கலங்க இருந்தது.
இயேசப்பா இவள் படுகுழியில் வீழ்ந்து விடாதபடி காப்பாற்றப்பா”' மானசீகமாக ஜாய்ஸி வேண்டினாள்.
இதன் தொடர்ச்சி முதல் கிறிஸ்மஸ்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.