தேவனின் உள்ளங்கை எத்தனை அழகு!

 சமூக ஊடகங்களில் எந்த தகவலும் பதிவு செய்யாமாலோ அல்லது புதுப்பித்தல் இன்றி காணப்பட்டால், நண்பர்கள் விசாரிப்பது வழக்கம். இப்படி மாதக்கணக்கில் முகநூலில் எந்த தகவலும் இன்றி அமைதியாக மற்றும் புதுப்பிக்காத ஒருவரைப் பற்றி அவருடைய நெருக்கமான நண்பர்கள் கவலைப்பட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதியாக இருந்ததால்,  அவர் எப்படி இருக்கிறார், அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா, நன்றாக இருக்கிறாரா என்பதை அறிய அவரை போனில் அழைத்தனர். ஆம், ஒரு நபர் தனது நிலையை சமூக வலைத்தளத்தில் புதுப்பிக்காதபோது, ​​அவர் காணாமல் போனார் அல்லது டிஜிட்டல் முறையில் இறந்துவிட்டார் என்பது அர்த்தமாகி விட்டது. ஆனால் நம் தேவனின் அற்புதமான வாக்குத்தத்தம் இப்படியாக கூறுகிறது, “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது” (ஏசாயா 49:16).

ஸ்மார்ட்போன்களா அல்லது அழகான உள்ளங்கையா?  
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வருகையானது ஸ்மார்ட்ஃபோன் எனப்படும் நேர்த்தியான சிறிய சாதனத்தில் அறிவு, தரவு, நினைவுகள் மற்றும் இணைப்புகளின் களஞ்சியமாக வைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் உள்ளங்கையில் வைத்துள்ள கேஜெட்களைக் கொண்டே ஆயிரக்கணக்கான மக்களின் சுயவிவரங்களை எளிதாக பார்க்க முடியும்.  தொழில்நுட்பம் அத்தகைய இயற்கைக்கு அப்பாற்பட்ட, ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான சாதனத்தை வழங்க முடிந்தால், எல்லா மனிதர்களின் சுயவிவரங்களையும் பொறிக்க தேவனின் உள்ளங்கையே போதுமானது என்று ஏசாயா வலியுறுத்துகிறார்.

மதில்: 
சமூக ஊடக தளங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணத்திலும் தங்கள் நிலையை பதிவேற்ற அனுமதிக்கின்றன.   நபரின் மதிலில் (status update) இடுகையிடப்பட்ட தகவல், இருப்பிடம், செயல்பாடு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவருக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்த நண்பர்களால் பார்க்கப்படுகிறது.

நிலை புதுப்பிப்புகள்: 
ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள் சுய வெளிப்பாட்டிற்கான இடமாகும்.   இருப்பினும், இந்த புதுப்பிப்புகள் பொது உபயோகத்திற்காக மட்டுமே இருக்க முடியும்.   தங்கள் நற்பெயரை உணர்ந்தவர்கள், மக்கள் பாராட்டுவதையும் ஊக்குவிப்பதையும் மட்டுமே பதிவிடுகிறார்கள்.  இது வெளிப்படைத்தன்மையைப் பற்றியது அல்ல, ஆனால் பாசாங்குத்தனம், ஆம், மகிழ்ச்சியான விஷயங்கள் மட்டும் தானே பதிவேற்றப்படுகின்றன. 

புதுப்பிப்புகள் இல்லை:  
கடினமான நாட்களில் புதுப்பிப்புகள் இருக்காது.   'லைக்குகள்' கிடைக்காததால், சிலர் தங்கள் சமூக ஊடகங்களைப் புதுப்பிப்பதை நிறுத்திவிட்டனர்.   சிலர் தங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி வெளியில் தெரிவிக்க வெட்கப்படுகிறார்கள், எனவே எதையும் தெரிவிப்பதில்லை அல்லது புதுப்பிப்பது இல்லை.  

புதுபிக்க தவறுதல்: 
ஒரு நபர் புதுப்பிக்கத் தவறினாலும், தேவன் தம்முடைய மக்களின் நிலையை அறிவார்.   வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பே தேவன் எண்ணங்களை அறிவார் (மத்தேயு 6:8). சமூக வலைத்தளத்தில் புதுப்பிக்காமல் எல்லாவற்றையும் மறைக்க முடியும்.  தேவனைப் பொறுத்தவரை, அவரது பிள்ளைகளிடமிருந்து தொடர்ச்சியான புதுப்பிப்புகள் உள்ளன; அதாவது அவர்களின் எண்ணங்கள், வார்த்தைகள், கூக்குரல்கள் மற்றும் புலம்பல்கள் என எப்போதுமே இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

எனது இதய ஸ்டேடஸ் தொடர்ந்து அவருக்கு முன்பாக இருப்பதால் நான் எவ்வளவு விலையேறப்பெற்ற நபர்? 

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download