சங்கீதம் 29:1-11 கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தரு டைய சத்தம் மகத்துவமுள்ளது
1. கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு கைக்கொள்ளுங்கள்
யாத்திராகமம் 15:26(23-27) நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதி களில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
உபாகமம் 13:4 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத் தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.
2. கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு பின்செல்லுங்கள்
யோவான் 10:1-11அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்ட பின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அயிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
ஏசாயா 6:8 யார் என் காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: (ஏசாயா) இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
3. கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு திறந்திடுங்கள்
வெளிப். 3:14-22 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
உன்னதப்பாட்டு 5:2,5,6(1-7)நா(ன் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்; என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காண வில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்க வில்லை
Author: Rev. M. Arul Doss .