உன்னதப்பாட்டு 5:1-7

5:1 என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.
5:2 நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
5:3 என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
5:4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார். அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது.
5:5 என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகளில்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
5:6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.
5:7 நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரரோ என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.




Related Topics


என் , சகோதரியே! , என் , மணவாளியே! , நான் , என் , தோட்டத்தில் , வந்தேன் , என் , வெள்ளைப்போளத்தையும் , என் , கந்தவர்க்கங்களையும் , சேர்த்தேன்; , என் , தேன்கூட்டை , என் , தேனோடு , புசித்தேன்; , என் , திராட்சரசத்தை , என் , பாலோடும் , குடித்தேன் , சிநேகிதரே! , புசியுங்கள்; , பிரியமானவர்களே! , குடியுங்கள் , பூர்த்தியாய்க் , குடியுங்கள் , உன்னதப்பாட்டு 5:1 , உன்னதப்பாட்டு , உன்னதப்பாட்டு IN TAMIL BIBLE , உன்னதப்பாட்டு IN TAMIL , உன்னதப்பாட்டு 5 TAMIL BIBLE , உன்னதப்பாட்டு 5 IN TAMIL , உன்னதப்பாட்டு 5 1 IN TAMIL , உன்னதப்பாட்டு 5 1 IN TAMIL BIBLE , உன்னதப்பாட்டு 5 IN ENGLISH , TAMIL BIBLE songofsongs 5 , TAMIL BIBLE songofsongs , songofsongs IN TAMIL BIBLE , songofsongs IN TAMIL , songofsongs 5 TAMIL BIBLE , songofsongs 5 IN TAMIL , songofsongs 5 1 IN TAMIL , songofsongs 5 1 IN TAMIL BIBLE . songofsongs 5 IN ENGLISH ,