நற்செய்தி அறிவித்தல்

"கிறிஸ்தவம் என்பது ஒரு பிச்சைக்காரன் மற்றொரு பிச்சைக்காரனிடம் ஆகாரம் எங்கே கிடைத்தது என்று சொல்வதே" என்பதாக டி.டி. நைல்ஸ் கூறினார். சுவிசேஷம் அறிவிப்பது குறித்து பல வார்த்தைகள் விவரிக்கப்படுகிறது, அவை நமக்கு நுண்ணறிவுகளை வழங்குகிறது. 

1) குழப்பம்:
பவுல் தனது தமஸ்கு அனுபவத்திற்குப் பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் உண்மையில் தேசம் எதிர்பார்க்கும் மேசியா என்ற சத்தியத்தை அறிவித்து யூத மக்களை கலங்கப்பண்ணினான் அல்லது குழப்பமடையச் செய்தான் (அப்போஸ்தலர் 9:22). 

2) நிரூபித்தல்:
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் உரைத்த கர்த்தராகிய இயேசுவே தாவீதின் குமாரனாகிய கிறிஸ்து என்பதை யூத மக்களுக்கு பவுல் நிரூபித்தான். 

3) பிரசங்கித்தல்:
பிரசங்கித்தல் என்ற மற்றொரு சொல் பயன்படுத்தப்பட்டது; "அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்" (அப்போஸ்தலர் 9:27). 

4) தர்கித்தல்:
அடுத்ததாக பயன்படுத்தப்படும் மற்றொரு சொல் வாதிடுவது அல்லது விவாதம் செய்வது.  அதாவது தர்க்கம் செய்வதைக் குறிக்கும் (அப்போஸ்தலர் 9:29).

5) பேசுதல்:
பவுல் பேசினார் என்பது ஏதோ ஒன்றைக் குறித்து தெளிவாக விவரிப்பதாகும் (அப்போஸ்தலர் 9:29)

6) எச்சரித்தல்:
நற்செய்தி வழங்கல் என்பது தேவனின் அன்பைப் பெறுவதற்கான அழைப்பாகும், அதே நேரத்தில் அவசரமாகச் செய்வதற்கான அறிவுரையும் ஆகும். சுவிசேஷத்தைப் பிரதிபலிக்காத அல்லது பரிசீலிக்காமல் நிராகரிப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையையும் உள்ளடக்கியது (அப்போஸ்தலர் 20:31).

7) அறிவுறுத்தல்:
பவுல் எல்லா யூதர்களுக்கும், தான் சென்ற இடமெல்லாம் நற்செய்தியைப் போதித்தார். தகவல் அல்லது சத்தியத்தைப் பகிர்வதும், தேவனின் வழியை அவர்களுக்கு அறிவுறுத்துவதும் இதில் அடங்கும் (அப்போஸ்தலர் 21:21,24).

8) வேண்டுகோள்:
கிறிஸ்தவர்கள் தேவனின் மற்றும் அவருடைய ராஜ்யத்தின் தூதர்கள் என்று பவுல் எழுதுகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவனோடு ஒப்புரவாகும்படி மக்களுக்காக மன்றாடுவதும், வேண்டுவதும், முறையிடுவதும், விண்ணப்பிப்பதும் பொறுப்பாகும் (2 கொரிந்தியர் 5:20)

9) கண்டித்தல்:
நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். "எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு". இங்கு பவுல் கடிந்துக் கொள்ளல், கண்டித்தல், உபதேசம் செய்தல் ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறார் (2 தீமோத்தேயு 4:2).  நற்செய்தி என்பது தேவனின் வார்த்தையாகும், மேலும் அவர் எல்லா மனிதகுலத்தின் மீதும் கண்டிக்கவும் கடிந்து கொள்ளவும் அதிகாரம் பெற்றவர்.

10) வேண்டுகோள்:
பேதுரு துரிதப்படுத்துதல்  என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் (1 பேதுரு 2:11). அதாவது சுவிசேஷத்திற்கு செவிசாய்க்கவும் பதிலளிக்கவும் மக்களை ஊக்கத்துடன் வற்புறுத்துவதாகும்.

11) பகிர்தல்:
விசுவாசிகள் எப்பொழுதும் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளவும் பாதுகாக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும் (1 பேதுரு 3:15).

12) காத்துக் கொள்ளல்:
"சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்" (பிலிப்பியர் 1:16). கள்ளப் போதகர்களின் வேதபுரட்டலில் இருந்து நற்செய்தியைப் பாதுகாப்பது அவசியம் என்று பவுல் எழுதுகிறார் (பிலிப்பியர் 1:16).

எப்போதும் தெளிவான மனதுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள நான் தயாரா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download