அனைவரும் தேவ தயவைப் பெற விரும்புகிறார்கள். அவருடைய அறிவுரைகளையும் பிரமாணத்தையும் பின்பற்றுபவர்கள் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயவைப் பெறுவார்கள் (நீதிமொழிகள் 3:4). தேவ தயவு என்பது தேவ நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவ தயவைப் பெற்ற ஆளுமைகளை வேதாகமத்தில் காண முடியும்.
1) ஜீவனைப் பாதுகாத்தல்:
யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டான், இருப்பினும் தேவனுடைய தயவு போத்திபார் யோசேப்பின் மீது காட்டிய தயவின் மூலம் வெளிப்பட்டது. "யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்" (ஆதியாகமம் 39:4). அதற்கு பின்பதாக பார்வோனின் அரண்மனையை அடைய தேவன் அவனை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றி கொண்டு வந்தார். "பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்" (ஆதியாகமம் 45:7); ஆம், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஒரு பெரிய விடுதலையுடன் பாதுகாப்பதே தனது உயர்விற்கான நோக்கம் என்று யோசேப்பு தனது சொந்த வார்த்தைகளில் கூறுகிறான்.
2) ஒடுக்குமுறையில் பாதுகாத்தல்:
எகிப்தியர்கள் இஸ்ரவேல் புத்திரரை ஒடுக்கி வெறுங்கையுடன் அனுப்பியிருப்பார்கள். இருப்பினும், தேவனுடைய தயவு எகிப்தியர்களின் பார்வையில் தயவை உருவாக்கியது, அதனால் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் கொள்ளையடித்தனர். "கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்"
(யாத்திராகமம் 3:21; 12:36).
3) ஒரு தேசத்தைப் பாதுகாத்தல்:
இஸ்ரவேல் தேசம் 127 மாகாணங்களில் சிதறடிக்கப்பட்டது. ஆமான் அனைத்து இஸ்ரவேலர்களையும் அரச ஆதரவுடன் இனப்படுகொலை மூலம் ஒன்றுமில்லாமல் ஆக்க விரும்பினான். இருப்பினும், எஸ்தர் அகாஸ்வேரு ராஜாவின் பார்வையில் தயவைக் கண்டாள், பொல்லாத ஆமானின் திட்டத்தை எதிர்த்துத் தோற்கடித்தனர் (எஸ்தர் 2:17).
4) நாடுகடத்தப்பட்ட நிலையில் பாதுகாத்தல்:
தேவனுடைய ஜனங்கள் தேவனுக்கு எதிராக பாவம் செய்தார்கள், அவர்கள் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டார்கள். எழுபது வருடங்கள் அங்கே இருப்பார்கள். யூத மக்கள் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நேபுகாத்நேச்சாரின் சேவையில் இருக்க தானியேலை தேவன் தயார் செய்தார். "தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்" (தானியேல் 1:9).
5) சாட்சிக்காக பாதுகாத்தல்:
பவுல் எருசலேமில் கைது செய்யப்பட்டார், யூதர்களால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு ரோமானிய காவலில் இருந்தார். அவர் செசரியாவில் ஒரு பாதுகாக்கப்பட்ட கைதியாக இருந்தார், பின்னர் அவர் இராயன் முன் ஆஜராக ரோமுக்கு அனுப்பப்பட்டார். கப்பல் விபத்து நடந்தபோது, வீரர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர், ஆனால் பவுல் நூற்றுக்கு அதிபதியான யூலியுவின் கண்களில் தயவைக் கண்டார், பாதுகாக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 27:27).
தேவ தயவிற்கான நோக்கம் எனக்கு புரிகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்