லூக்கா 23:34 பிதாவே, இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்
1. கர்த்தர் மன்னிக்கிறவர் (மறுவாழ்வு அளிக்கிறவர்)
யாத்திராகமம் 34:7 ஆயிரம் தலைமுறைமட்டும் மன்னிக்கிறவர்
சங்கீதம் 86:5 நல்லவரும் மன்னிக்கிறவரும் கிருபை மிகுந்தவர்
ஏசாயா 55:7 மன்னிக்கிறதற்கு தயை பெருத்திருக்கிறார்
தானியேல் 9:10 ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு
1யோவான் 2:2 பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே
எபேசியர் 1:7 இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
2. கர்த்தர் மன்னித்தவர் (மனந்திரும்ப செய்தவர்)
யோவான் 8:1-11 விபசாரி பெண்ணை நோக்கி: நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே என்று இயேசு மன்னிக்கிறார்
லூக்கா 7:48 (37-48) பாவியாகிய பெண் இயேசுவின் பாதங்களைக் கண்ணீரால் நனைத்து, தன் தலை மயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்தாள். அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக் கப்பட்டது என்றார்
மத்தேயு 9:2 படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.
3. கர்த்தர் மன்னிப்பவர் (மன்னிக்கச் சொன்னவர்)
மத்தேயு 18:20-35 இயேசு பேதுருவிடம்: ஏழு எழுபதுமுறை மன்னிக்கச் சொல்லுகிறார்; கடனை மன்னியுங்கள்.
மாற்கு 11:25-26 ஜெபம்பண்ணும்போது ஒருவருக்கொருவர் குறைபாடு வந்தால் அவனுக்கு மன்னியுங்கள்
மத்தேயு 6:14 மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்
எபேசியர் 4:32 கிறிஸ்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல ஒருவருக் கொருவர் மன்னியுங்கள்
கொலோசெயர் 3:13 கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக் கொருவர் மன்னியுங்கள்
Author: Rev. M. Arul Doss