யோவான் 8:1-11

8:1 இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
8:2 மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.
8:3 அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
8:4 போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
8:5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
8:6 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
8:7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
8:8 அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
8:9 அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
8:10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேரொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
8:11 அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.




Related Topics



லெந்து தியானம்- நாள் 26-Bro. Dani Prakash

Mr. தவறை மட்டும் வேட்டையாடுபவர் (யோவான்8:1-11) கல்லெறியவா கருணை காட்டவா?  தவறை மட்டும் கண்டுபிடிக்க அலைபவர்கள் பரதீசுவிலும் தவறை...
Read More




ஞானமா அல்லது அழகா-Rev. Dr. J .N. மனோகரன்

இந்தியாவில் ஆண்களுக்கான அழகுப்படுத்தும் நிலையங்கள் 2018 இல் $ 643 மில்லியனில் இருந்து 2022 இல் $ 2 பில்லியனாக விரைவான வேகத்தில் வளர்ந்துள்ளது மற்றும் இந்த...
Read More



இயேசு , ஒலிவமலைக்குப் , போனார் , யோவான் 8:1 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 8 TAMIL BIBLE , யோவான் 8 IN TAMIL , யோவான் 8 1 IN TAMIL , யோவான் 8 1 IN TAMIL BIBLE , யோவான் 8 IN ENGLISH , TAMIL BIBLE John 8 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 8 TAMIL BIBLE , John 8 IN TAMIL , John 8 1 IN TAMIL , John 8 1 IN TAMIL BIBLE . John 8 IN ENGLISH ,