ஜூன் 10 அன்று, லூதியானாவில் உள்ள சிஎம்எஸ் செக்யூரிட்டிஸ் என்ற பண மேலாண்மைச் சேவை நிறுவனத்தில் பாதுகாப்புக் காவலர்களைக் கடத்திச் சென்று குறைந்தது 11 பேர் கொள்ளையடித்தனர். எண்பது மில்லியன் ரூபாயை (எட்டு கோடி) திருடியதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது, ஒரு ஜோடி. அவர்கள் ஒரு வழிபாட்டு இடத்திற்கு தங்கள் வெற்றிக்கு நன்றி தெரிவிக்க சென்றனர். இலவச பழ பானங்கள் வழங்கும் பெட்டிக்கடை ஒன்றை போலீசார் அமைத்தனர். தம்பதிகள் வந்து அதில் வாங்கினர், பின்னர் போலீசார் அவர்களை பின் தொடர்ந்து சென்று கைது செய்தனர் (பிசினஸ் டுடே, ஜூன் 19, 2023). "களவு செய்யாதிருப்பாயாக" (யாத்திராகமம் 20:15) என்று வேதாகமம் கட்டளையிடுகிறது.
வரையறை:
நமக்குச் சொந்தமில்லாத எதையும் எடுப்பது திருடுவதாகும். வெறுமனே பொருட்கள் திருடுவதை மாத்திரம் அல்ல; திருட்டு என்பதில் பல்வேறு விஷயங்கள் அடங்கும். உரிமையாளர் இல்லாதபோது திட்டமிட்டு திருடுவது, துப்பாக்கி முனையில் ஒருவரைப் பிடித்துக் கொண்டு கொள்ளையடிப்பது அல்லது கப்பம் கேட்பது போன்ற சில வகையான திருட்டுகள் உண்டு.
சிந்தனைகள் மற்றும் யோசனைகள்:
பதிப்புரிமையை மீறுவது என்பது ஒருவரின் யோசனைகள் அல்லது எண்ணங்களை திருடுவதாகும். பணிகள் மற்றும் ஆய்வறிக்கைகளை நகலெடுப்பது மற்றவர்களின் கடின உழைப்பு மற்றும் அறிவுசார் பங்களிப்பை சூறையாடுவதாகும்.
நேரத்தை களவாடுதல்:
சரியான நேரத்தை கடைப்பிடிக்காமல் இருப்பது மற்றவர்களின் நேரத்தை திருடுகிறது ஆகும். வேண்டுமென்றே மற்றவர்களை காத்திருக்க வைப்பதும் பாவம்.
பொது இட விதிமீறல்கள் ஒரு களவு:
'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால், பொது இடம் திருடப்படுகிறது. வீடுகள் அல்லது கடைகளை விரிவுபடுத்துவதற்காக பொது இடத்தை ஆக்கிரமிப்பதும் இந்த கட்டளையை மீறுவதாகும்.
நற்பெயரை களவாடுதல்:
வதந்திகளைப் பரப்புவது, பொய் தகவல்களை மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகளை அனுப்புவது போன்ற காரியங்களும் மற்றவர்களின் நற்பெயரைத் திருடுவதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
மற்றவர்களின் பெயரை களவாடுதல்:
வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது அரசியலில் மற்றவர்களின் சாதனைகளுக்கு நியாயமற்ற முறையில் வேறொருவர் பெயர் பெறுதல் இந்த கட்டளையை மீறுவதாகும்.
முகவரியை களவாடுதல்:
தற்போது, நவீன தொழில்நுட்பத்தால், முகவரியை திருடுவது சகஜமாகி விட்டது. தொழில்நுட்பம் அல்லது தவறான உத்தரவாதங்கள் மூலம் மற்றவர்களின் நிதிகளை ஏமாற்றி திருடுவது பாவச்செயல்.
பணையத்தீநிரல் ஒரு களவு:
கம்ப்யூட்டர்கள், வலையமைப்புச் சேவையகம் மற்றும் தரவு சேமிப்பு ஆகியவற்றை முடக்குவதன் மூலம் பெரும் மீட்கும் தொகையை கோருவது என்பது ஒரு உடலுழைப்பு அற்ற தீமையாகும்.
கடத்தல் ஒரு களவு:
மக்கள் குழந்தைகளை அல்லது பெண்களை கடத்தி அவர்களை விடுவிக்க பணம் கேட்கின்றனர்.
வரதட்சணை ஒரு களவு:
வரதட்சணை கேட்பதும், குடும்பத்தை கடனில் தள்ளுவதும் ஒருவித திருட்டு.
தேவனிடமே களவாடுதல்:
மிக மோசமான திருட்டு தேவனுக்கு எதிரானதாக இருக்கலாம். “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே" (மல்கியா 3:8).
நான் மற்றவர்களின் பொருட்களை அல்லது எண்ணங்களை அல்லது நேரத்தை அல்லது நற்பெயரைத் திருடுகிறேனா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்