இரட்டை அமைப்பு

தேவன் உலகில் பல வழிகளில் செயல்படுகிறார். இருப்பினும், இரண்டு வெவ்வேறு வழிகளில் தேவன் தம் ஜனங்களோடு இடைபடுவதைக்  காண்கிறோம்.  அவை ஆசாரிய அமைப்பு மற்றும் தீர்க்கதரிசன அமைப்பு என்று அழைக்கப்படலாம்.

ஆசாரிய அமைப்பு

இஸ்ரவேல் தேசத்தின் எல்லா தலைமுறைகளிலும் தேவாலயம் அல்லது வாசஸ்தலத்தில் தொடர்ந்து வழிபாடு நடந்து கொண்டே தான் இருந்தது. வெளிச்சம் குறையாதபடி குத்துவிளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருந்தது, மேஜையின் மீது நித்தமும் சமூகத்தப்பங்கள் வைக்கப்பட்டது, மேலும் தூபமும் பலிகளும் தொடர்ந்து நடந்தன (லேவியராகமம் 24:2; யாத்திராகமம் 25:30; யாத்திராகமம் 30:8). ஆலயம்  பாழாகும் நாள் வரையுமே வழிபாடு, பலிகள் மற்றும் காணிக்கைகள் என நாள் முழுவதும் நடந்தன. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த விழாவும் கொண்டாடப்பட்டது. ஆலயத்திலும் யூதர்கள் கூடும் இடங்களிலும் தேவனுடைய வார்த்தை வாசிக்கப்பட்டது அல்லது கற்பிக்கப்பட்டது. பெரும்பாலான யூத மக்கள் இதில் ஏதோ ஒரு வகையில் ஈடுபட்டுள்ளனர்.

தீர்க்கதரிசன அமைப்பு

இருப்பினும், ஆலயத்தின் மூலம் மக்களுக்கு ஊழியம் செய்வதைத் தவிர, பொதுவாக ஆலய வளாகத்திற்கு வெளியே பேசும்படியாக தீர்க்கதரிசிகளைத் தேவன் பயன்படுத்தினார். அவர்கள் உரத்த குரலில், தைரியமாக, தேவன் கட்டளையிட்டதைப் பேசினார்கள். மேலும் தீர்க்கதரிசிகளில் பலர் துன்புறுத்தப்பட்டனர்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து, எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்" (மத்தேயு 23: 29-30)

பெரிய முரண்பாடு:

யோவான் ஸ்நானகனின் தந்தையான சகரியா ஆசாரிய அமைப்பைச் சேர்ந்தவர், யோவான் ஸ்நானகன் தீர்க்கதரிசன அமைப்பைச் சேர்ந்தவர்.  காபிரியேல் தூதன் சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது, யோவான் ஸ்நானகன் பிறப்பை அறிவிக்க அவருக்கு தோன்றினான் (லூக்கா 1: 5-23).  இதற்கு நேர்மாறானது என்னவெனில், யோவான் ஸ்நானகன் தனது ஊழியத்திற்காகவும் பணிக்காகவும் ஆலயத்தைத் தேர்ந்தெடுக்காமல் வனாந்தரத்தைத் தேர்ந்தெடுத்தார். அவர் ஆலயத்தில் உள்ள அனைத்து சடங்குகளையும் நிராகரித்தார், ஞானஸ்நானத்தின் புதிய மரபை உருவாக்கினார்.  சகரியா பழமைவாதி, மரபுவழி; யோவான் ஸ்நானகன் சீர்திருத்தவாதி.  ஆம், தலைமை ஆசாரியரோ அல்லது ஆலோசனை சங்கமோ ஏரோதின் பாலியல் ஒழுக்கக்கேடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை;  ஆனால் யோவான் தீர்க்கதரிசி அவனைக் கண்டித்தார்; தலை துண்டிக்கப்பட்டார் (லூக்கா 3:19; மத்தேயு 14:3-5).

உலகில் கர்த்தருடைய ஆசாரிய மற்றும் தீர்க்கதரிசன ஊழியத்தை நான் அங்கீகரிக்கிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download