எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்" (லூக்கா 10:20). அதாவது கர்த்தர் சாத்தான் வீழ்வதைப் பற்றி பேசினார். சாத்தானுக்கு நான்கு விதமான வீழ்ச்சிகள் உள்ளன.
நமது ஆவிக்குரிய பயணத்தில் நாம் தேவையற்ற காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் காலக்கட்டங்கள் உள்ளன. கர்த்தராகிய ஆண்டவர் எழுபது சீஷர்களை தேர்ந்தெடுத்தார், அவர்கள் இரண்டிரண்டாக பிரிக்கப்பட்டு ஊழியத்திற்கு அனுப்பப்பட்டனர். "பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்" (லூக்கா 10:17). அதற்கு இயேசு "ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில்
1) அக்கிரமத்திற்கல்ல மகிமை:
சாத்தானாகிய லூசிபர் தேவதூதர்களில் ஒருவன். அவனுக்கு நிறைய சலுகைகள், கௌரவங்கள், பட்டங்கள் மற்றும் மரியாதைகள் இருந்தன. இருப்பினும், அவன் தன்னை அனைவரும் தொழுது கொள்ள வேண்டுமென்றும் தேவனைக் காட்டிலும் உயர்ந்த சிம்மாசனம் வேண்டும் என விரும்பியதால் அவனுக்கான முன்னுரிமைகளில் அதிருப்தி அடைந்தான். ஆகையால் அவன் தேவனுடைய பர்வதத்திலிருந்து வெளியேற்றப்பட்டான் (எசேக்கியேல் 28: 14-16).
2) அணுகுவதற்கான தடை:
வெளியேற்றப்பட்டாலும், அவனுக்கு வானத்திலும் பூமியிலும் கையாளுவதற்கான அளவு என்னவோ குறைவாகதான் இருந்தது. அவன் விரும்பியதையெல்லாம் செய்ய முடியாது. யோபுவின் விஷயத்தில் கூட அவரை சோதிக்க அல்லது துன்புறுத்த தேவனிடம் அனுமதி பெற வேண்டியிருந்ததல்லவா! (யோபு 1:12; I இராஜாக்கள் 22:21; சகரியா 3: 1 மற்றும் வெளிப்படுத்துதல்
3) அடிமைத்தன வாழ்வு:
கர்த்தர் சாத்தானை 1000 வருஷமளவும் பாதாளத்திலே தள்ளி அடைத்து வைத்திருப்பார் (வெளிப்படுத்துதல் 20:10). சாத்தானால் வானத்தில் எதுவும் இயக்க முடியாது, இனி தேவப் பிள்ளைகளை குற்றம் சுமத்த முடியாது, அவன் பாதாளத்தில் தள்ளப்பட்டு சிறைப்படுத்தப்படுவான்/ அடைக்கப்படுவான்.
4) அதலபாதாளத்திலிருந்து அக்கினி கடல் வரை:
இறுதித் தீர்ப்பாக, "மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்" (வெளிப்படுத்துதல் 20:10)
இப்படியாக தோற்கடிக்கப்பட்ட அல்லது வீழ்ந்துப்போன எதிரியான சாத்தானுக்கு பயப்படும் பல கிறிஸ்தவர்கள் உள்ளனர். அதில் சிலர் தங்களால் பிசாசுகளைத் துரத்த முடியும் என்று மகிழ்கின்றனர். எவ்வாறாயினும், மறுபடியும் பிறத்தல் மற்றும் பரலோகத்தில் நம் பெயர்கள் இடம் பெறுவதின் முக்கியத்துவத்தை நோக்கிப் பார்க்க தேவன் எதிர்பார்க்கிறார். நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்கும்போது, நாம் பிதாவால் முத்திரையிடப்பட்டு பாதுகாக்கப்படுகிறோம், மேலும் நல்ல மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கைகளிலிருந்து நம்மை யாரும் பறித்துக் கொள்ள முடியாது (யோவான் 10:28). இப்படியாக நாம் அவரிடத்தில் இருக்கும்போது, சாத்தானை ஜெயம் கொண்டு நாம் அவரிடம் பெரும் வெற்றியை அனுபவிக்கிறோம். ஆம், "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" என்பதாக பவுல் எழுதுகிறார் (ரோமர் 8:37).
நான் கிறிஸ்துவுக்குள்ளாக ஜெயம் கொள்கிற நபராக இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran