தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக

ஒரு பிரசங்கியார் இப்படியாக அறிவித்தார்; “நான் இந்தக் கூட்டத்திற்காக ஜெபிக்கவில்லை.  ஆனாலும், நான் பேசுவது எல்லாம் தேவனுடைய வார்த்தையே”.  இது எப்படியென்றால் தேவனுடைய நாமத்தை வீணாக பயன்படுத்திக் கொண்டு, மனித வார்த்தைகளை தேவனின் வார்த்தையாக உயர்த்துவது போலாகும்.  மற்றொருவர், கூட்டத்தில் பிரசங்கிக்கத் தயாராக இருப்பதாகவும், தேவன் தனக்கு அந்தச் செய்தியைக் கொடுத்ததாகவும் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் கன்னியர்களுக்கான செய்தி அது, ஆனால் பங்கேற்பாளர்கள் அனைவரும் திருமணமானவர்கள்.  பத்து கட்டளைகளில் ஒன்று; "உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்" (யாத்திராகமம் 20:7).

1) நம்பகத்தன்மையை நிலைநாட்ட வீணிலே வழங்குகிறார்கள்:

"அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்" (ஆதியாகமம் 27:20). அவனுடைய தாயார் ரெபெக்காள் அந்த இறைச்சியைப் பெற்று சமைத்தாள்.  யாக்கோபு தேவனுடைய பெயரை வீணாகப் பயன்படுத்தினான். நேர்மை இல்லாதவர்கள், தங்கள் நம்பகத்தன்மையை நிலைநாட்ட தேவ நாமத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

2) பொய், ஏமாற்றுதல் என வீணிலே வழங்குகிறார்கள்:

 “அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்" (எரேமியா 23:21).  பொய்யான தீர்க்கதரிசிகள் அனுப்பப்படவில்லை, ஆனால் அவர்கள் உண்மையான தீர்க்கதரிசிகளுக்கு முன்பே ஓடினார்கள் அல்லது முக்கியமான இடத்தை (மக்கள் கவனத்தை ஈர்க்கும் இடம்) அல்லது மேடையை ஆக்கிரமித்தார்கள் அல்லது மைக்ரோஃபோனைப் (மின்சார ஒலிபெருக்கி) பிடித்தார்கள் அல்லது சமூக ஊடகங்களில் முதலில் வந்தனர். "பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்" (எரேமியா 28:15) என்றார்.

3) பாசாங்குத்தனம் மூலம் வீணிலே வழங்குகிறார்கள்:

வெறுமனே ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்லிக் கொண்டு அற்புதங்கள், அடையாளங்கள், அதிசயங்கள் செய்தாலும் பரலோகத்தில் நுழைய முடியாது.  ஏனென்றால், பரலோகத்தில் நுழைய முடியாதபடி பொல்லாப்பான, அநீதியான, ஒழுக்கக்கேடான காரியங்களையும் செய்கிறார்கள்.  "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை" (மத்தேயு 7:21).

4) தூஷண நடத்தையின் மூலம் வீணிலே வழங்குகிறார்கள்:

ஒருவர் சொன்னார், பிரம்மச்சாரி கடவுளை அதாவது இயேசு கிறிஸ்துவை நாங்கள் வணங்குவதில்லை. மற்றொருவர் சொன்னார் கர்த்தராகிய இயேசு ஒரு குற்றவாளி என்றும், தவறான உறவில் பிறந்தவர் என்றும் கூறினார்.  இத்தகைய பேச்சுக்கள் அவதூறுகள்.

5) சபித்தலின் மூலம் வீணிலே வழங்குகிறார்கள்:

ஆண்டவராகிய இயேசு எதிரிகளை ஆசீர்வதிக்கவும்,, துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்கவும் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 5:44; ரோமர் 12:14). துன்புறுத்துபவர்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சபிக்கும் பிரசங்கியார்கள் இருக்கிறார்கள், அது கர்த்தருடைய நாமத்தை வீணாக வழங்குவதாகும்.

நான் தேவனுக்கு முன்பாக பயபக்தியுடன் நிற்கிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download