ஒரு போதகரை, யாருக்கும் அடங்காத மற்றும் நீதி நேர்மையற்ற ஒருவன் பயங்கரமாக துன்புறுத்திக் கொண்டிருந்தான்; போதகரோ பொறுமையாக சகித்துக்கொண்டார், ஆனால் ஒருமுறை அவருக்கும் பொறுமை இழந்தது. ஒருநாள் போதகர் பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போது அந்த ரவுடி மனிதன் சலசலப்பை உருவாக்கினான். அப்போது போதகர் மேடையிலிருந்து குண்டர்களை அழைத்தார், “மேடைக்கு வாருங்கள். நாம் ஒரு மல்யுத்தப் போட்டியை நடத்துவோம், வெற்றி பெறுபவர் இந்த மேடையில் இருந்து பிரசங்கம் செய்வார்" என்றார். ஆம், ஒரு ஊழியக்காரரை துன்மார்க்கர்கள் தொடர்ந்து விடாமல் ஒடுக்கும்போது, அவர் விரக்தியில் அப்படிப் பதிலளிக்கலாம். "நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது" (சங்கீதம் 125:3) என வேதாகமம் சொல்கிறது.
தேவனின் செங்கோல்:
தேவ ஜனங்கள் மட்டுமல்ல, முழு உலகமும் அவருடைய இறையாண்மை மற்றும் அதிகாரத்தின் கீழ் உள்ளது. துன்மார்க்கரின் செங்கோல் தேவனின் செங்கோலை விட பெரியது அல்ல. சிறிய அளவிலான செங்கோல் கூட வேண்டுமென்றே நீதிமான்களை ஆளவோ அல்லது இருட்டடிப்புச் செய்யவோ முடியாது.
நீதிமான்களுக்கான சோதனை:
தேவ ஜனங்களை விழுங்கக்கூடிய அளவிலான பெரிய சோதனைகளை தேவன் அனுமதிப்பதில்லை. தன்னை நேசிக்கும் மற்றும் தன் ஊழியங்களைச் செய்பவர்கள் சோதிக்கப்படும்போது தப்பிப்பதற்கான வழியையும் அவர் வழங்குகிறார்.
எல்லாம் நன்மைக்கே:
இத்தகைய சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் கூட வலி, அவமானம், துன்பம் மற்றும் தோல்வியிலிருந்து நன்மையை வெளிக்கொணர தேவனால் மாற்றப்படுகின்றன (ரோமர் 8:28) . தீய குற்றச்சாட்டுகள், துன்புறுத்தல்கள், பொல்லாத சதிகள், தோல்விகள், இழப்புகள், துன்பங்கள், வலிகள் அனைத்தும் தேவனை நேசிப்பவர்களுக்கு அற்புதமான நன்மையை வெளிக்கொணர அவர் மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம்.
தேவன் நிர்ணயித்த வரம்புகள்:
லேகியோன் சம்பவத்தைப் போல, விலங்குகளுக்குள் நுழைய கூட, பேய்களுக்கு தேவனின் அனுமதி தேவை. ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அனுமதியுடன் மட்டுமே பிசாசுகள் இரண்டாயிரம் பன்றிகளுக்குள் நுழைய முடியும் (மாற்கு 5:13). தேவன் யோபுக்கு வேலிபோட்டிருந்தாலோ அல்லது பாதுகாப்பு அளித்திருந்ததாலோ சாத்தானால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் யோபுவைத் தாக்க முடியவில்லை (யோபு 1:10).
உயர்ந்த நோக்கம்:
இந்த உலகில் ஒரு விசுவாசிக்கு வெளிப்படையான தோல்வி, பின்னடைவு அல்லது மரண விளிம்பில் இருக்கும் போது; அது வாழ்க்கையில் தேவனின் உயர்ந்த நோக்கத்திற்காக உள்ளது. இந்தியாவில் பணியாற்றிய ஏமி கார்மைக்கேல், கோவிலுக்கு விடப்பட்ட தாசிகளை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தார். பின்னாளில் ஒரு விபத்து காரணமாக அவர் படுத்த படுக்கையானார். ஆனால் அவருடைய படுக்கை பிரசங்கமாக மாறியது, அதில் இருந்து பல புத்தகங்கள் எழுதப்பட்டன.
நான் விரக்தியடைகிறேனா? அல்லது ஜெயம் கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்