இஸ்ரவேலின் ராஜாவான ஆகாப், தனக்கென்று ஒரு தேசத்தையே வைத்திருந்த போதிலும் அதில் திருப்தியடையவில்லை. அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் மீதும் ஆசைப்பட்டான், அந்த தோட்டத்தை அவனுடைய மூதாதையர்களிடமிருந்து அவன் பெற்றிருந்தான். ஆகையால் அவன் கொடுக்க மறுத்ததால், ஆகாப் ஏமாற்றமடைந்தான், எரிச்சலடைந்தான். அவனது மனைவி யேசபேல், சட்ட விரோதமாக அதைப் பெற சதி செய்தாள். நாபோத்துக்கு எதிராக பொய் சாட்சிகளாக அயோக்கியர்களை பணியமர்த்த உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர், மேலும் அவன் கல்லெறிந்து கொல்லப்பட்டான். எலியா இந்தச் செயலைக் கண்டித்தார், கண்டனம் செய்தார். மேலும் ஆகாப், யேசபேல் மற்றும் அவனுடைய சந்ததியினர் மீது தேவனின் தீர்ப்பை அறிவித்தார் (1 இராஜாக்கள் 21:1-29). இந்த சம்பவத்தில் மூன்று வகையான பொல்லாதவர்களும் ஒரு நீதியுள்ள தீர்க்கதரிசியும் உள்ளனர்.
பொல்லாதவனும் பலவீனமானவனும்:
ஆகாப் சுயநலவாதி மற்றும் தனது அண்டை வீட்டாரின் சொத்துக்கு ஆசைப்பட்டான், அதாவது பத்தாவது கட்டளையை மீறினான். நாபோத்திடமிருந்து அதை வாங்குவதற்கு அவன் முறையற்ற வழிகளைப் பயன்படுத்தினான். நிலத்தின் உரிமையாளரான நாபோத்துக்கு அதை தனக்காக வைத்திருக்கவோ அல்லது விற்கவோ உரிமை உண்டு. அதைக் கேட்டு தொல்லைப்படுத்தினான் ஆகாப், ஆனால் தான் விரும்பியது கிடைக்காதபோது, ஆகாப் துக்கமடைந்து அடம்பிடிக்கும் குழந்தையைப் போல நடந்துகொண்டான்.
பொல்லாதவளும் வலிமையானவளும்:
யேசபேல் பொல்லாதவள், தேவனையோ அல்லது அவருடைய பிரமாணங்களையோ பொருட்படுத்தவில்லை. அதிகாரத்துடனும் மதிப்புடனும் ஒரு ராஜாவைப் போல நடந்து கொள்ளாததற்காக அவள் ஆகாபைக் கண்டித்து கேலி செய்தாள். புத்திசாலித்தனத்தை, அவள் தனது பொல்லாத இலக்கை அடைய சட்டத்தைப் பயன்படுத்தினாள். அதிகாரத்துவத்தினர் அவள் தாளத்திற்கு நடனமாடத் தயாராக இருந்தனர். பொய் சாட்சி கொடுக்க இரண்டு அயோக்கியர்களை (பேலியாட்கள்) அழைத்து வந்து, அவதூறாக குற்றம் சாட்டி, நாபோத்தை அநியாயமாக கல்லெறிந்து கொல்ல வைத்தாள்.
பொல்லாத அடிமைகளும் அவர்களின் செயல்களும் :
இந்த பொல்லாத அதிகாரிகள் தேவனுக்கு சேவை செய்யவில்லை, ஆனால் பொல்லாத ஆட்சியாளர்களுக்கு சேவை செய்தனர், மேலும் ஆகாப் மற்றும் யேசபேல் கொடுத்த அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தனர். எது சரி என்பதை அவர்கள் அறிந்திருந்தும், தீமை செய்வதையே தெரிந்தெடுத்தனர் (யாக்கோபு 4:17). பொய் சாட்சி கொடுப்பது பத்துக் கட்டளைகளை மீறுவதாகும். பொய்ச் சாட்சியங்களைக் கொடுக்க அயோக்கியர்களைத் தூண்டி நீதியை புரட்டிப் போட்டார்கள். பிறக்காத எபிரேய குழந்தைகளை கொல்ல பார்வோனின் கட்டளையை மருத்துவச்சிகள் மறுத்தனர் (யாத்திராகமம் 1:17). ஏனெனில் அவர்கள் தேவனுக்குப் பயந்தனர், இந்த பொல்லாத கூட்டத்தினருக்கோ தேவ பயமே இல்லை.
நீதிமானும் அவரின் தைரியமும்:
எலியா அமைதியாக இருக்க முடிவு செய்திருக்கலாம். ஆனால், இப்போது இறந்துவிட்ட நாபோத் மற்றும் அவனது குடும்பத்தாரின் சொத்துகளைப் பார்க்கவும் கைப்பற்றவும் வந்த ஆகாபை எதிர்கொண்டார். நடந்த கொலைக்காகவும், நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றியதற்காகவும் எலியா கண்டித்தார். அதுமட்டுமல்லாமல் துணிச்சலுடன் அவன் குடும்பம் மற்றும் அவர்களின் சந்ததியினர் மீதான தீர்ப்பையும் அறிவித்தார்.
நான் எலியாவைப் போல் தைரியமும் நீதியும் உள்ள நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்