ஒரு அறிவுஜீவி வேதாகமத்தை இழிவுபடுத்த விரும்பினார். உலகத்தின்படி பணக்காரர்களாக இல்லாத, ஆனால் விசுவாசத்தில் ஐசுவரியமுள்ள ஒரு சில பெண்களுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். அவர்களிடம்; "செங்கடல் பிளவுபடவெல்லாம் இல்லை, இஸ்ரவேலர்கள் ஒரு அடி ஆழமான தண்ணீரில் நடந்து சென்றனர்" என்றார். உடனடியாக ஒரு பெண் கூச்சலிட்டார்; “அல்லேலூயா, என்ன ஒரு மகத்துவமான தேவன், கர்த்தரைத் துதியுங்கள், தேவன் எகிப்திய இராணுவத்தையும், அவர்களுடைய இரதங்களையும் குதிரைகளையும் வெறும் ஒரு அடி ஆழமான தண்ணீரில் மூழ்கடித்தது உண்மையாகவே எவ்வளவு பெரிய அதிசயம்". அறிவுஜீவியால் பதிலளிக்க முடியவில்லை, அவருக்கு பெருத்த அவமானம்.
செங்கடல்:
கர்த்தர் அவர்களை செங்கடல் வனாந்தரத்தின் வழி நடத்தினார். இது செங்கடலின் மேற்கு ‘விரல்’ எகிப்தின் எல்லை வரை நீண்டுள்ளது. இது நவீன கால சூயஸ் வளைகுடா என்று நம்பப்படுகிறது.
பார்வோனின் துரத்துதல்:
இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிவதாக பார்வோனுக்குத் தகவல் கிடைத்தது. தேவன் அவன் இருதயத்தையும் கடினப்படுத்தினார். பார்வோன் தனது முந்தைய முடிவை முட்டாள்தனமாக உணர்ந்தான். அடிமைகளின் இலவச சேவையை அவர்கள் எப்படி எளிதாக இழக்க முடியும்? பார்வோன் தனது ரதத்தைத் தயார் செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களைக் கொண்ட தனது படையையும் குதிரை வீரர்களுடன் மற்ற இரதங்களையும் திரட்டினான் (யாத்திராகமம் 14:7).
பயங்கொண்ட இஸ்ரவேல்:
இஸ்ரவேல் எகிப்திய இராணுவத்தைக் கண்டு பயந்து நடுங்கியது (யாத்திராகமம் 14:10-11). எகிப்தின் அச்சுறுத்தல் பத்தாவது கொள்ளை நோயுடன் முடிந்துவிட்டதாக அவர்கள் கருதினர். இருப்பினும், அவர்கள் தங்களை அடிமைப்படுத்த அணுகுவதை பார்த்தார்கள். அவர்கள் மோசேயை நோக்கி; எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?
என முணுமுணுத்தார்கள். தேவனின் வாக்குத்தத்ததை மறந்து, மரணத்தைக் குறித்து புலம்பினார்கள்.
பயங்கர நம்பிக்கையுடன் மோசே:
முதலாவதாக, தேவன் அவர்களுக்காக வல்லமையான வேலையைச் செய்வார். இரண்டாவதாக, அவர்கள் இப்போது பார்க்கும் எகிப்தியரை ஒருபோதும் பார்க்க முடியாது. மூன்றாவதாக, கர்த்தர் யுத்தம் செய்வார். நான்காவதாக, மௌனம் காப்பதே அவர்களின் வேலை (யாத்திராகமம் 14:13).
பலத்த அதிசயம்:
இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது இஸ்ரவேலுக்கு ஒளியாகவும் அதே சமயம் எகிப்தியருக்கு இருளாகவும் இருந்தது.
பின்னோக்காமல் முன்னோக்கி நட:
கர்த்தர் மோசேக்கு கையை நீட்டி, செங்கடலைப் பிளந்து, இஸ்ரவேலரை அணிவகுத்துச் செல்லும்படி கட்டளையிட்டார்.
படைகள் நீரில் மூழ்கியது:
எகிப்தியர்கள் அதிகமாக ஓட்ட வேண்டியிருந்தது. தேவன் கட்டளையிட்டபடி மோசே திரும்பி கையை நீட்டினார்; அனைத்து எகிப்தியர்களும் நீர் நிறைந்த கல்லறையை எதிர்கொண்டனர். பெருமைமிக்க, கலகக்கார, எதிர்க்கும் எகிப்தியர்களை தேவன் நியாயந்தீர்த்தார்.
ஆண்டவரின் மகத்தான வெற்றிகளை நான் கொண்டாடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்