வீட்டிலிருந்து கொண்டே பணி செய்வது என்பது உலகம் முழுவதும் பொதுவானது, கொரோனா காலங்களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டது. பல போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் ஊழிய கதவுகள் மூடப்பட்டிருப்பதை உணர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். சிலர் தங்கள் ஊழியத்தைச் செய்வதற்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகும், வீட்டிலிருந்து பணி செய்வது இன்னும் தொடர்கிறது மற்றும் பணி வாழ்க்கையின் ஒரு அம்சமாகத் தெரிகிறது. அப்படியானால், ஏன் ‘வீட்டில் இருந்து கொண்டே அருட்பணி செய்யக் கூடாது?’ முக்கியமாக ஓய்வு பெற்றவர்கள், வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத பெண்கள் அல்லது எவராக இருந்தாலும் கூட புதுமையான முறையில் வீட்டிலிருந்து தேவனின் பணியைச் செய்யலாமே.
1) சுவிசேஷம்:
டிஜிட்டல் இளைஞர்கள் ஒரு கட்டுரை 240 வார்த்தைகளைத் தாண்டினாலே சோர்வடைகிறார்கள். 240 வார்த்தைகளில் சாட்சியங்களை எழுதுவது சவாலானது, 240 வார்த்தைகளில் நற்செய்தியை வழங்குவது என்பது மற்றொரு சவாலாக உள்ளது, ஆனால் அனைத்தும் செய்யப்பட வேண்டும், ஏனெனில் நம்மில் பெரும்பாலோர் அத்தேனே பட்டணத்தில் பவுல் அழைக்கப்பட்டதைப் போல வாயாடிகள் (அப்போஸ்தலர் 17:18). மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தி சிறு சிறு வீடியோக்களை உருவாக்குவதும் அதை பகிர்ந்துகொள்வதும் மற்றொரு அருட்பணி முறையாகும்.
2) சீஷர்:
ஓய்வுபெற்ற பெண் ஒருவர் மக்களை நெறிப்படுத்த ஆன்லைன் வேதாகம படிப்பைத் தொடங்கினார். அவர் சமூக வேதாகம படிப்பு (CBS) புத்தகங்களை பயன்படுத்தத் தொடங்கினார் மற்றும் அதிலுள்ள மூன்று புத்தகங்களைக் கற்பித்தார். கற்பிக்கும் போது வீடியோ பதிவுகளையும் செய்து வலையொளியில் (YouTube) பதிவேற்ற முடியுமே.
3) தலைமை:
தொற்றுநோய்களின் போது ஒரு ஆசிரியர் ஆன்லைனில் தலைமைத்துவ வகுப்புகளைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில், பன்னிரண்டு தொகுதிகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட தலைவர்கள் ஆற்றல்மிக்க தலைவர்களாக ஆவதற்குத் தகுதி பெற்றனர்.
4) ஆலோசனை:
பல இளம் பருவத்தினர், பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள் இந்த டிஜிட்டல் உலகில் தனிமையான சூழ்நிலையில் உள்ளனர். அவர்களில் சிலர் வாழ்க்கையில் நம்பிக்கையற்றவர்களானார்கள்; தற்கொலையும் செய்து கொண்டனர். சில இளைஞர்கள் இந்த குழுவில் கவனம் செலுத்தினர், நல்ஆலோசனை பெற்றனர் மற்றும் ஆன்லைன் நற்செய்தி மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவும் முடிந்தது.
5) உள்ளடக்க உருவாக்கம்:
டிஜிட்டல் உலகில் அதிகமான நுகர்வோர் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, பசியுள்ளவர்களுக்கு சத்தற்ற அல்லது ஆலோக்கியமற்ற உள்ளடக்கம் வழங்கப்படாததால், பலர் குப்பை உள்ளடக்கத்தை உட்கொள்கின்றனர். இன்ஸ்டாகிராம் இயங்குதளங்களுக்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவானதாகவும், யூடியூப் இயங்குதளங்களில் 15 நிமிடங்களுக்கும் குறைவானதாகவும் மற்றும் தீவிரமாக கற்பவர்களுக்கு நீண்ட கால உள்ளடக்கங்களோடும் பல்வேறு கால நேரங்களோடு உள்ளடக்கங்கள் தேவை.
முடிவில்லாமல் ஸ்மார்ட்போனையே மேலும் கீழுமாக நகர்த்துவது, நேரத்தை பயனுள்ளதாக செலவழிப்பதாக நினைப்பது எல்லாம் புத்திசாலித்தனம் அல்ல. மாறாக, டிஜிட்டல் கருவிகள் தான் பிரசங்க மேடைகள் மற்றும் டிஜிட்டல் உலகம் தான் பார்வையாளர்கள், ஆக நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும், சத்தியத்தைப் பிரசங்கிப்பதற்கும், மக்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் பிரயோஜனமாக பயன்படுத்தலாமே.
நான் கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் மற்றும் திறந்த கதவுகளையும் ஊழியத்திற்காகப் பயன்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்