சொந்தமாக நிறுவனத்தை வைத்திருந்த நல்ல திறமையான, மிகவும் அறிவுடைய மற்றும் புத்திசாலியான பெண் தனது 4 வயது மகனை கொன்றதற்காக கைது செய்யப்பட்டாள் (ஜனவரி 10, 2024 NDTV). அவள் செயற்கை அறிவுத்திறனில் (AI) நிபுணர். சுவாரஸ்யமாக அவள் தொழில்துறைக்கான நெறிமுறைகளை உருவாக்க சர்வதேச AI நெறிமுறைகள் குழுவில் இருந்தாள். ஒரு தாய் தன் குழந்தையை மறப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று வேதாகமம் கற்பிக்கிறது (ஏசாயா 49:15). மிக அரிதாகவே ஒரு பெண் தன் குழந்தையை மறந்துவிடுவாள் அல்லது கொலைசெய்வாள்.
கசப்பு:
அந்த பெண் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அவர்களின் உறவு மோசமடைந்தது மற்றும் கசப்பானது. கசப்பு மிகவும் ஆழமாக இருந்தது, அது அவளைக் கண்மூடித்தனமாக ஆக்கியது, அவள் மற்றவர்கள் மீது கசப்பைக் கொட்டினாள், குறிப்பாக ஒரு அப்பாவியான அவளுடைய மகன் பாதிக்கப்பட்டான்.
வெறுப்பு:
முன்பு ஒரு ஜோடியாக, அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தார்கள், மகன் அவர்களின் அன்பின் சான்று. ஆனாலும், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி இருவரும் பிரிந்தனர். காவல் நிலையத்தில் வழக்குகள் போடப்பட்டது, நிம்மதியாக வாழவும் முடியவில்லை.
பேராசை:
நீதிமன்றத்தில், தன் மகனுக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்று கோரினாள். அவள் நிறைய சம்பாதித்தாலும், தங்கள் மகனின் வளர்ப்பிற்கு பணம் பெற நீதிமன்றத்தை நாடினாள். அவள் கூறிய தொகை மிகப்பெரியது. ஒரு சராசரி தொழிலாளியின் ஆண்டு வருமானத்தை விட அவள் ஒரு மாதத்திற்கு கோரும் தொகை அதிகமாக இருந்தது.
சுயநலம்:
ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தையைப் பார்க்க கணவருக்கு நீதிமன்றம் உரிமை வழங்கியது, அது இவளுக்கு பிடிக்கவில்லை. அவள் குழந்தையின் ஒரே பாதுகாவலராக இருக்க விரும்பினாள், ஆனால் அவனை வளர்ப்பதற்கு ஒரு பெரிய தொகையைப் பெறவும் விரும்பினாள். இருந்தாலும் தகப்பனுடைய நிழல் கூட குழந்தையின் மேல் படுவதை அவள் விரும்பவில்லை.
இயல்பான அன்பு மூழ்கியது:
தன் மகன் மீது அவளுக்கு இயல்பான அன்பு இல்லை, மாறாக, அது கசப்பு, வெறுப்பு, பேராசை மற்றும் சுயநலத்தால் நசுக்கப்பட்டது. பவுல் எழுதுவது போல், கடைசி நாட்களில், மக்கள் சுயநலவாதிகளாகவும், சுயத்தை விரும்புபவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும், இதயமற்றவர்களாகவும் இருப்பார்கள்; இந்தப் பெண்ணும் அப்படித்தான் (2 தீமோத்தேயு 3:1-5).
சரியான உறவு:
தேவனுடன் சரியான உறவைப் பேணுவதும், மற்றவர்களுடன் சரியான உறவைக் கொண்டிருப்பதும் அவசியம். புத்திசாலித்தனம், மனித நெறிமுறைகள், உலகம் நிர்ணயிக்கும் ஒழுக்கம் மற்றும் வெற்றி என இவை மட்டும் போதாது.
தேவனின் அன்பை நான் ருசிபார்த்துள்ளேனா? அதை நான் சரியாய் வெளிப்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்