பெரும்பசி நோய் (Bulimia Nervosa) என்பது பண்டைய உலகில் இருந்த ஒரு கலாச்சார நிலை. ரோமானியர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு, விருந்தில் முதல் வாய் சாப்பிட்ட பிறகு வாந்தியைத் தூண்டுவதற்காக தொண்டையைக் நிமிண்டுவார்கள் (tickle), பின்னர் மீண்டும் அடுத்த வாய் சாப்பிடுவதும் அதையே திரும்ப திரும்ப செய்வதுமாக இருந்தது. ரோம் நகரத்தில் சிறப்பு அரங்க வெளிச்செல் வாயில் இருந்தது, அது குறுகியதாக இருக்கும். அதில் சிறப்பு விருந்தினர்கள் அல்லது முக்கியமான அதிபதிகள் அதை பயன்படுத்துவார்கள். ரோமானிய பேரரசர்கள் கிளாடியஸ் மற்றும் விட்டெலியஸ் புலிமிக் ஆவார்கள். "நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை" (நீதிமொழிகள் 23:2) என்பதாக ஞான இலக்கியம் எச்சரிக்கிறது. ஆரோக்கியமாக இருப்பதற்கும் கொள்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன (நீதிமொழிகள் 23: 1-4).
1) சுவையான உணவு:
ஆரோக்கியத்திற்கு ஆபத்தான சுவையான உணவுகள் உள்ளன. கோடிக் கணக்கான மக்கள் பட்டினியால் அவதிப்படும் போது, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் புதிய உணவு வகைகளை தேடிச் செல்வோரும் உள்ளனர்.
2) வஞ்சிக்கும் உணவு:
சிலர் உடல்நலக் காரணங்களுக்காக உணவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இருப்பினும், சிலரது உணவுக்கான ஏக்கங்கள் ஆபத்தானவை. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இனிப்புகளுக்கு ஏங்குவார், இது அவரை ஏமாற்றும் உணவாகும்.
3) பகுத்தறியும் உணவு:
நல்ல ஆரோக்கியமான உணவை நமது பட்ஜெட்க்குள் உண்பது என்பது சிறந்ததாகும். சிலர் நினைப்பது போல் நமது மேசையில் இருப்பது நமது அந்தஸ்தை தீர்மானிக்காது. "உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்" (யாத்திராகமம் 23:25) என்பதாக ஆண்டவர் வாக்களித்துள்ளார். மனநிறைவும் விசுவாசமும் சிறந்த ஊட்டச்சத்தாகவும் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் இருக்கிறது. ஆம், உணவே மருந்து.
4) தவிர்க்கும் உணவு:
பெருந்தீனி ஆரோக்கியமற்றது, தீங்கு விளைவிக்கக்கூடியது மற்றும் உயிருக்கு ஆபத்தானது. சோதோமின் ஆகாரத்திரட்சி மற்றும் அதோடு சேர்த்து அவர்களின் பெருமையும் செழிப்பும் அவர்களின் அழிவிற்கு வழிவகுத்தது (எசேக்கியேல் 16:49).
இதில் வருத்தம் என்னவெனில், சிலருக்கு உணவே தங்கள் தெய்வம். ஆம், பிலிப்பியர் 3:19ல் கூறப்பட்டது போல "அவர்களுடைய தேவன் வயிறு". பெருந்தீனியாக இருப்பதை விட நன்றாக தூங்குவது நல்லது (பிரசங்கி 5:12). தாவீது இவ்வாறு பாடுகிறான்: "அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்" (சங்கீதம் 4:7). தாவீது ஒன்றை நன்றாக புரிந்துகொண்டான் போலும், ஆம், "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" (மத்தேயு 4:4). தேவ பிரசன்னம், ஆராதனை, அவருடைய வார்த்தையைக் கேட்பது, அவருடைய சித்தத்தைச் செய்வது ஆகியவை விருப்பமான உணவைக் காட்டிலும் பெரியவை (யோவான் 4:34). சீஷர்கள் "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காக கிரியை நடப்பிக்க வேண்டும்" (யோவான் 6:27).
உலகின் சிறந்த உணவை விட தேவனில் நான் மகிழ்ச்சியடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்