1. கோல் பட்டவுடன் சமுத்திரம் பிரிந்தது
யாத்திராகமம் 14:10-31 நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போவார்கள். யாத்திராகமம் 17:1-6; யாத்திராகமம் 7:14-20
2. கால் பட்டவுடன் நதி பிரிந்தது
யோசுவா 3:5-17 பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே யோர்தான் நதி தண்ணீர் பிரிந்தது
3. சால்(வை) பட்டவுடன் நதி பிரிந்தது
2இராஜாக்கள் 2:1-15 அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் (எலியா, எலிசா) அக்கரைக்குப் போனார்கள்.
4. எலும்பு பட்டவுடன் உயிர் அடைந்தது
2இராஜாக்கள் 13:20-21 (எலிசா) மனுஷனின் பிரேதம் எலிசாவின் எலும்பு களின் மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். எசேக்கியேல் 37:1-10 உலர்ந்த எலும்புகள்...
5. கரம் பட்டவுடன் அற்புதம் நடந்தது
மத்தேயு 8:1-4 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி சுத்த மானான். மத்தேயு 8:14-15; 9:29-30; மாற்கு 5:41-42; 7:31-35; லூக்கா 7:14
6. ஆடை பட்டவுடன் உதிரம் நின்றது
லூக்கா 8:43-48 பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள பெண் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டாள்; அது அவள்மீது பட்டவுடனே வல்லமை புறப்பட்டு உதிரத்தின் ஊறல் (பெரும்பாடு) நின்று போயிற்று
7. நிழல் பட்டவுடன் சுகம் கிடைத்தது
அப்போஸ்தலர் 5:15-16 (பேதுரு) நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்தார்கள்... குணமாக்கப்பட்டார்கள்.
Author: Rev. M. Arul Doss .