பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்

பிலிப்பியர் 1:29 கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
2தீமோத்தேயு 2:12 அவரோடேகூடப் பாடுகளை சகித்தோமானால் அவரோ டேகூட ஆளுகையும் செய்வோம். 
1பேதுரு 2:19-23 கிறிஸ்து பாடுபட்டு, மாதிரியை பின்வைத்துப்போனார்
1பேதுரு 3:14  நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்கள்
எபிரெயர் 2:18  அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
எபிரெயர் 5:8  அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படி தலைக் கற்றுக்கொண்டு... பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். அப்போஸ்தலர் 9:16(1-18) (அனனியா-பவுல்) 

1. பாடுகளைக்குறித்து பயப்படாதிருங்கள்
வெளிப். 2:10  நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப் படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படு வீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.

2. பாடுகளைக்குறித்து வெட்கப்படாதிருங்கள்
1பேதுரு 4:16  ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப் படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.
2தீமோத்தேயு 1:12  நான் இந்த பாடுகளை அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படவில்லை...
1கொரிந்தியர் 4:12 எங்கள் கைகளினாலே வேலைச்செய்து, பாடுபடு கிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு சகிக்கிறோம்.

3. பாடுகளைக்குறித்து சங்கடப்படாதிருங்கள்
1பேதுரு 4:13  கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
1கொரிந்தியர் 12:26 ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் பாடுபடும். கொலோசெயர் 1:24; 2தெசலோனிக்கேயர் 1:5

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download