ராம் கிடாமூல் தனது 'மை சில்க் ரோடு' என்ற புத்தகத்தில் தனது ஆவிக்குரிய பயணத்தை பற்றி எழுதியுள்ளார். இந்திய வம்சாவளி பெற்றோருக்கு கென்யாவில் பிறந்தவர். அவரது குடும்பம் அவரை இந்து மரபுகளில் வளர்த்தது, சீக்கிய மதத்தையும் அறிந்திருந்தார் மற்றும் பள்ளியில் இஸ்லாமியர்களிடையே வளர்ந்தார். அவருக்கு கிறிஸ்தவம் என்பது வெள்ளையர்களின் மதம், அவருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கென்யாவில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக அவர் இளமைப் பருவத்தில் ஒரு அகதியாக லண்டனுக்கு செல்ல நேரிட்டது. அவர் தனது ஆவிக்குரிய பயணத்தை விளக்குகிறார்;
பரிந்துரை:
ராமின் தந்தை ஒரு தொழிலதிபர் மற்றும் சுவிட்சர்லாந்தில் வணிக கூட்டுறவுகளைக் கொண்டிருந்தார். வணிக பங்காளிகளில் ஒருவரான மார்கரிட்டா உக்கர், ராமின் குடும்பத்தினர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஜெபித்தனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷருமானார், காலப்போக்கில் அவரது தந்தையும் மரித்தார். அதற்கு பின்பதாக அவர் சுவிட்சர்லாந்து சென்றார். அவரிடம் வேதாகமம் இருந்தது, அது எப்படி சாத்தியம் என்று அவர்கள் யோசித்தார்கள். ராமைக் கண்டு மலைத்து போனவர்களாய்; நீங்கள் இப்போது விசுவாசியா? என்று கேட்டு விட்டு; அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று பல வருடங்களாக ஜெபித்ததைக் குறித்து விளக்கினாள்.
தகவல் - வேதம்:
கல்லூரி மாணவனாக இருந்த ராம் தனிமையாக உணர்ந்ததைக் குறித்து எழுதுகிறார்; "நீங்கள் ஒரு பப்பில் சோர்வாக நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், யாராவது உங்களிடம் வந்து பேசுவார்கள் என்பதை நான் கண்டுபிடித்தேன்." ஒருமுறை இசைக் கலைஞர்கள் அவரைப் பார்த்து, அவரிடம் பேசி, ஒரு வேதாகமத்தைக் கொடுத்தனர். அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க ஆரம்பித்தார். சில பகுதிகள் அவருக்கு நன்கு தெரிந்தவையாக இருந்தன. அதனைக் குறித்து அவர் யோசித்தபோது கென்யாவில் உள்ள தனது வீட்டில், 'தினசரி பலம்' (டெய்லி ஸ்ட்ரெந்த்) என்ற தின தியானம் புத்தகம் ஸ்கிரிப்ச்சர் கிஃப்ட் மிஷனால் வெளியிடப்பட்ட ஒன்று, அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது பற்றி நினைவுக்கு வந்தது.
அறிவுரை:
பப்பில் சந்தித்த நண்பனை ராம் அடிக்கடி சந்திப்பது வழக்கம், ஆனால் பெரும்பாலும் அது வாக்குவாதத்தில் முடிந்தது.
நுண்ணறிவு:
வேதாகமத்தில் ராம் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தைப் படித்தபோது, அது பொருத்தமானதாகவும் நுண்ணறிவுடையதாகவும் இருந்தது. அது லண்டன் மக்களுக்கு பவுல் எழுதிய கடிதமாக இருக்கலாம். பல மதங்கள் நல்ல போதனைகளைக் கொண்டிருந்தாலும், பாவ மன்னிப்புக்கு யாரும் அவருக்கு உறுதியளிக்கவில்லை என்பதை அவர் உணர்ந்தார்; எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தெரிந்து கொண்டார்.
ஊக்கமான பரிந்துரை, பப்பில் கூட தைரியமான சாட்சி ((சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு (2 தீமோத்தேயு 4:2)), மற்றும் வழக்கமான போதனை அவரை கிறிஸ்துவிடம் அழைத்துச் சென்றது.
எனது ஆவிக்குரிய பயணம் எப்படிப்பட்டது?
Author: Rev. Dr. J .N. மனோகரன்