கைவிடப்பட்ட நபரா அல்லது அபிஷேகம் செய்யப்பட்ட நபரா?

தனியார் பள்ளிகள் தங்கள் நற்பெயரைப் பாதுகாக்க விரும்புகின்றன மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக மாணவர்கள் தங்கள் நிறுவனங்களில் சேர வேண்டும் என்றும் விரும்புகின்றன.  அதற்காக, மேல் வகுப்புகளுக்கு வரும் முன்னரே மாணவர்களின் செயல்திறனைக் கவனமாகச் சரிபார்க்கிறார்கள்.  அவர்கள் சராசரியாகவோ அல்லது சராசரிக்குக் குறைவாகவோ இருந்தால், அவர்களின் பெற்றோரை வரவழைத்து,  குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்கச் சொல்கிறார்கள்.  பிரகாசமான, சராசரிக்கும் அதிகமான, நம்பிக்கைக்குரிய மற்றும் புத்திசாலிகள் மட்டுமே அந்தப் பள்ளியில் தக்கவைக்கப்படுகிறார்கள்.  சராசரி மற்றும் சராசரிக்கும் குறைவான மாணவர்கள் கல்வி நிறுவனத்தால் கைவிடப்பட்டுள்ளனர்.  உலகின் கண்ணோட்டத்தில், சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்வது ஒரு நல்ல உத்தியாக இருக்கலாம்.  ஆனால் தோல்வியுற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அதில் கால நேரங்களை செலவழித்து முன்னேற செய்வதே அதாவது வெற்றி பெற செய்வதே உண்மையான சேவை.  தாவீது கைவிடப்பட்டவர்களின் தலைவராக ஆனான், அதற்கு பின்பு அவர்கள் வலிமைமிக்க மனிதர்களாக மாற்றப்பட்டனர் (1 சாமுவேல் 22:1-2).

கடன், துன்பம், அதிருப்தி, அவநம்பிக்கை
ஒரு சிலர் கடனில் இருந்தனர்.  சவுலின் கீழ் இஸ்ரவேலின் பொருளாதாரம் நன்றாக இல்லை.  இந்த மக்கள் நிதி இழப்பு மற்றும் கடனை அனுபவித்தனர்.  குடும்ப உறவுகள் அல்லது துக்கம் அல்லது பேரழிவு காரணமாக சிலர் துயரத்தில் இருந்தனர்.  பலர் அதிருப்தியும் தெரிவித்தனர்.  அதாவது அவர்கள் உள்ளத்தில் கசப்பை அனுபவித்தார்கள்.  அவர்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் கண்டுபிடிக்கவில்லை.

தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
இந்த மனிதர்கள் தாவீதினால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.  அவர்கள் அனைவரும் அதுல்லாம் கெபியில் தாவீதிடம் வந்தனர்.  அந்த கெபி நோவாவின் பேழை போல இருந்தது, அங்கு இந்த மனிதர்கள் அனைவரும் கூடினர்.

தாவீது பலவீனப்பட்ட காலங்கள்
தாவீது அரசரான பிறகு இவர்கள் வரவில்லை.  தாவீது ஒரு கலகக்காரனாக அறிவிக்கப்பட்டு, வேட்டையாடப்பட்டு, இகழ்ந்து, உயிருக்காக ஓடும்போது அவர்கள் வந்தனர்.  வருங்கால ராஜாவாக தாவீதுக்கான தேவனின் அழைப்பை இந்த மனிதர்கள் பகுத்தறிந்தனர் என்பதை அது காட்டியது.  யோனத்தானைப் போலவே, தாவீது மீது தேவனின் கரம் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.  ஜனங்களை கையாள்வதில் தேவன் தாவீதை பயிற்றுவித்தார் (சங்கீதம் 78:72).

மாற்றம் பெற்ற மனிதர்கள்
நானூறு பேரும் கும்பல் அல்ல.  தாவீதின் அதிகாரத்தின் கீழ், அவர்கள் ஒரு படையாக இருக்க ஒழுங்குபடுத்தப்பட்டனர். “காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்” (1 நாளாகமம் 12:8). கைவிடப்பட்டவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக மாறலாம்.

நான் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியரா அல்லது கைவிடப்பட்ட நபரா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

 Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download