லூக்கா 8:43-48

8:43 அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
8:44 அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
8:45 அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
8:46 அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
8:47 அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்டகாரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
8:48 அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.




Related Topics



சமாதானத்தோடே அனுப்புங்கள்-Rev. M. ARUL DOSS

மத்தேயு 5:9 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் ரோமர் 12:18; எபிரெயர் 12:14; யோவான் 14:27   1. சமாதானத்தோடே போ...
Read More



அப்பொழுது , பன்னிரண்டு , வருஷமாய்ப் , பெரும்பாடுள்ளவளாயிருந்து , தன் , ஆஸ்திகளையெல்லாம் , வைத்தியர்களுக்குச் , செலவழித்தும் , ஒருவனாலும் , சொஸ்தமாக்கப்படாதிருந்த , ஒரு , ஸ்திரீ , , லூக்கா 8:43 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 8 TAMIL BIBLE , லூக்கா 8 IN TAMIL , லூக்கா 8 43 IN TAMIL , லூக்கா 8 43 IN TAMIL BIBLE , லூக்கா 8 IN ENGLISH , TAMIL BIBLE Luke 8 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 8 TAMIL BIBLE , Luke 8 IN TAMIL , Luke 8 43 IN TAMIL , Luke 8 43 IN TAMIL BIBLE . Luke 8 IN ENGLISH ,