சங்கீதம் 121

சங்கீதம் 121

1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

3 உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

5 கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

6 பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

7 கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.

8 கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.

Related Topics/Devotions

மோட்டார் சைக்கிள் தெய்வமாகிறது - Rev. Dr. J.N. Manokaran:

1988 டிசம்பரில் ஓம் சிங் ரத Read more...

இலக்கற்ற வாழ்க்கையின் ஒடுக்குமுறை உணர்வு - Rev. Dr. J.N. Manokaran:

ஜோர்டன் பி. பீட்டர்சன் தனது Read more...

உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை - Rev. Dr. J.N. Manokaran:

மத்திய கிழக்கில் ஒரு கதை உண Read more...

ஒரு சிறந்த குடும்பம் - Rev. Dr. J.N. Manokaran:

கட்டுமான நிறுவனங்களின் விளம Read more...

துக்கத்தின் மத்தியில் நிம்மதியான தூக்கம் - Rev. Dr. J.N. Manokaran:

தாவீதின் மகன்களில் அப்சாலோம Read more...

Related Bible References