சங்கீதம் 127

சங்கீதம் 127

1 கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;

2 கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.

3 நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

5 வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.

Related Topics/Devotions

ஒரு சிறந்த குடும்பம் - Rev. Dr. J.N. Manokaran:

கட்டுமான நிறுவனங்களின் விளம Read more...

தேவனற்ற வாழ்வு வீணான வாழ்வு - Rev. Dr. J.N. Manokaran:

"Nisi Dominus Frusta&q Read more...

தந்தை தனது மகளைச் சுட்டுக் கொன்றார் - Rev. Dr. J.N. Manokaran:

மகேஷ் குஜார் தனது மகள் தனுவ Read more...

வயிற்றில் உயிருள்ள கோழி - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு விசித்திரமான சம்பவத்தில Read more...

வல்லமையுள்ளவர் கையில் உள்ள அம்பு - Rev. Dr. J.N. Manokaran:

‘பொறுமை என்பது சகிப்ப Read more...

Related Bible References