சங்கீதம் 23

சங்கீதம் 23

1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

Related Topics/Devotions

யாத்ரீக பயணத்தில் வலிமையைக் கண்டறிதல் - Rev. Dr. J.N. Manokaran:

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பர Read more...

எப்போதும் நன்மை செய்கிறவர் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு கிறிஸ்தவமற்ற பின்னணியில Read more...

மனதுருக்கம் உள்ள மேய்ப்பர் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு பிரபலமான நடிகர், புகழின Read more...

ஜெபங்களுக்கு நீதியான பதில்கள் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு திருச்சபையில், ஒரு அறிவ Read more...

வேத பிரமாணத்தின் மூலம் தேவ செய்தி - Rev. Dr. J.N. Manokaran:

தேவ வார்த்தை "தோரா&quo Read more...

Related Bible References