1யோவான் 4:8-16

4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
4:10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
4:11 பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
4:12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
4:13 அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
4:14 பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.
4:15 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
4:16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.




Related Topics



பெண்ணே! நீ தேவசாயல்-Mrs. Helen Jacob.

பெண்ணே! நீ தேவசாயல் பின்பு தேவன் நமது சாயலாகவும். நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை...
Read More



அன்பில்லாதவன் , தேவனை , அறியான் , தேவன் , அன்பாகவே , இருக்கிறார் , 1யோவான் 4:8 , 1யோவான் , 1யோவான் IN TAMIL BIBLE , 1யோவான் IN TAMIL , 1யோவான் 4 TAMIL BIBLE , 1யோவான் 4 IN TAMIL , 1யோவான் 4 8 IN TAMIL , 1யோவான் 4 8 IN TAMIL BIBLE , 1யோவான் 4 IN ENGLISH , TAMIL BIBLE 1John 4 , TAMIL BIBLE 1John , 1John IN TAMIL BIBLE , 1John IN TAMIL , 1John 4 TAMIL BIBLE , 1John 4 IN TAMIL , 1John 4 8 IN TAMIL , 1John 4 8 IN TAMIL BIBLE . 1John 4 IN ENGLISH ,