1. இருள் நீக்கும் இறைவன் (இருட்டு, கருப்பு, நரகம்)
ஏசாயா 9:2; மத்தேயு 4:15 இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிற வர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
லூக்கா 1:78 அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிற வர்களுக்கு வெளிச்சம் தரவும்... உன்னதத்திலிருந்து தோன்றிய அருனோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்
ஏசாயா 59:9 வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகா சத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.
மீகா 7:8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்
2. மருள் போக்கும் இறைவன் (பயம், மயக்கம், வியப்பு)
லூக்கா 1:13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்.
லூக்கா 1:30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனித்தில் கிருபைபெற்றாய்.
லூக்கா 2:10 தேவதூதன் அவர்களை (மேய்ப்பர்களை) நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
3. அருள் அளிக்கும் இறைவன் (கிருபை, கருணை, இரக்கம்)
லூக்கா 1:28-30 மரியாள் இருந்த வீட்டிலே தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றார்.
1பேதுரு 5:5 தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
நீதிமொழிகள் 3:34; யாக்கோபு 4:6 தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்
Author: Rev. M. Arul Doss