சங்கீதம் 27:14; 31:24 கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.
1. காத்திருக்கிறவர்கள் புதுபெலன் அடைவார்கள்
ஏசாயா 40:31 (29-31) கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்பு வார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
நெகேமியா 8:10 கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே பெலன்
சங்கீதம் 37:7 கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு
2. காத்திருக்கிறவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்
சங்கீதம் 37:9 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
சங்கீதம் 25:12,13 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களின் சந்ததி
சங்கீதம் 69:35,36 ஊழிக்காரரின் சந்ததியார் சுதந்தரிப்பார்கள்
சங்கீதம் 37:11,22,29,34 சாந்தகுணமுள்ளவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர் கள், நீதிமான்கள், காத்திருக்கிறவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்.
மத்தேயு 5:5 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்.
3. காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டுப் போகார்கள்
சங்கீதம் 25:3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் தூரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப்போவார்களாக
ஏசாயா 49:23 நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப் படுவதில்லை என்பதை அறிந்துகொள்வாய்.
ஏசாயா 50:7 ஆண்டவர் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லை
சங்கீதம் 69:6 உமக்காக காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப் பட்டுப்போகாதிருப்பார்களாக
சங்கீதம் 22:5; 25:20; 31:17; 34:5 ஏசாயா 54:4; யோவேல் 2:26; 2தீமோத்தேயு 1:12
Author: Rev. M. Arul Doss