தரிசனம் பெற்றவர்கள்

ஆதியாகமம் 12:7;15:1;17:1;18:1 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
2. ஈசாக்கு 
ஆதியாகமம் 26:2,24 கர்த்தர் ஈசாக்குக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார். 
3. யாக்கோபு 
ஆதியாகமம் 35:9-10 யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து: இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்
4. மோசே 
யாத்திராகமம் 3:2; உபாகமம் 31:15 கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜøவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். 
5. கிதியோன் 
நியாயாதிபதிகள் 6:12 கர்த்தர் கூடாரத்திலே மேகஸ்தம்பத்தில் தரிசனமாகி: பரக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
6. சாமுவேல் 
1சாமுவேல் 3:1,4,6,8,10,21 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்ச மான தரிசனம் இருந்ததில்லை. அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி...
7. சாலொமோன் 
1இராஜாக்கள் 3:5; 9:2; 2நாளாகமம் 7:12-16 கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை கேள் என்று தேவன் சொன்னார். 
Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download