1. மரியாளுக்குத் தரிசனம்
மாற்கு 16:9 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதன்முதல் தரிசனமானார்.
யோவான் 20:11-18 மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்ட தையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.
2. சீடர்களுக்குத் தரிசனம்
மாற்கு 16:12 எம்மாவூர் சீஷர்கள் இரண்டுபேர் நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.
மாற்கு 16:14 அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்த தம்மை நம்பாமற் போன தினிமித்தம் அவர்களைக் கடிந்துகொண்டார்.
யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் சாயங்கால வேளையிலே, சீஷர்களுக்கு தரிசனமானார்.
யோவான் 20:26 எட்டு நாளைக்குப் பின்பு மறுபடியும் தரிசனமானார்.
யோவான் 21:1-4 சீஷர்கள் மறுபடியும் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது, இயேசு கரையிலே நின்றார்
3. அப்போஸ்தலருக்கு தரிசனம்
அப்போஸ்தலர் 1:3 அவர் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ் தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்க ளுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர் களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
அப்போஸ்தலர் 13:3; 1கொரிந்தியர் 15:6
4. அனனியாவுக்குத் தரிசனம்
அப்போஸ்தலர் 9:10 தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன் ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.
5. பவுலுக்குத் தரிசனம்
அப்போஸ்தலர் 9:1-9; 16:9; 18:9; 26:16 ப(ச)வுல் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. கர்த்தர் அவனோடே பேசினார்.
Author: Rev. M. Arul Doss