நான் பாவம்செய்தேன் என்று ஒப்புக்கொண்டவர்கள்

நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட் டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் 1யோவான் 1:9 பாவங்களை அறிக்கையிட்டால் மன்னிப்பார்
1. பிலேயாம் ஒப்புக்கொண்டான்
எண்ணாகமம் 22:34 பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ் செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்
2. ஆகான் ஒப்புக்கொண்டான்
யோசுவா 7:20  ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய் தேன் இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன்
3. சவுல் ஒப்புக்கொண்டான்
1சாமுவேல் 15:24,30; 1சாமுவேல் 26:21  சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
4. தாவீது ஒப்புக்கொண்டான்
2சாமுவேல் 12:13; 2சாமுவேல் 24:10,17  தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்
5. மீகா ஒப்புக்கொண்டான்
மீகா 7:9  நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டு வருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.
6. யூதாஸ் ஒப்புக்கொண்டான்
மத்தேயு 27:4  குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்
7. இளையக்குமாரன் ஒப்புக்கொண்டான்
லூக்கா 15:18,21 நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download