கர்த்தருடைய வார்த்தைகள்

1. கர்த்தருடைய வார்த்தைகள் ஒழிவதில்லை 
மத்தேயு 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத் தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது  
மத்தேயு 24:35; மாற்கு 13:31; லூக்கா 21:33; எரேமியா 18:18 

2. கர்த்தருடைய வார்த்தைகள் திரும்புவதில்லை 
ஏசாயா 55:10-11 என் வாயில் இருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்பு கிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்

3. கர்த்தருடைய வார்த்தைகள் நீங்குவதில்லை 
ஏசாயா 59:21 உன்மேல் இருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயில் இருந்தும், உன் சந்ததியின் வாயில் இருந்தும் நீங்குவதில்லை  

4. கர்த்தருடைய வார்த்தைகள் தாமதிப்பதில்லை 
எசேக்கியேல் 12:28 என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனி தாமதிப் பதில்லையென்றும் நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்றும் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்

5. கர்த்தருடைய வார்த்தைகள் குறைவதில்லை 
எரேமியா 26:2 நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே  உபாகமம் 4:2; உபாகமம் 12:32; நீதிமொழிகள் 30:6; ஏசாயா 34:16

6. கர்த்தருடைய வார்த்தைகள் தவறிபோகவில்லை 
யோசுவா 23:14, 1இராஜாக்கள் 8:56 (மோசே, யோசுவா) உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிபோகவில்லை

7. கர்த்தருடைய வார்த்தைகள் விழுந்துபோகவில்லை 
1சாமுவேல் 3:19; 2இராஜாக்கள் 10:10 (சாமுவேல், எலியா மூலம் சொன்ன வார்த்தைகள்) அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோகவிடவில்லை

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download