1. கண்களைத் திறந்தார்
ஆதியாகமம் 21:19(9-20) ஆகாரின் கண்களைத் திறந்தார்
எண்ணாகமம் 23:31(21-34) பிலேயாமின் கண்களைத் திறந்தார்
2இராஜாக்கள் 6:17,20(8-23) வேலைக்காரரின் கண்களைத் திறந்தார்
ஆதியாகமம் 3:7 ஆதாம் ஏவாளின் கண்களைத் திறந்தார்
சங்கீதம் 119:18, சங்கீதம் 146:8; மத்தேயு 9:30; யோவான் 9:6,7
2. செவியைத் திறந்தார்
ஏசாயா 50:4,5 கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை
யோபு 36:15 சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் செவியைத் திறக்கிறார்
மாற்கு 7:35 கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர் அவனுடைய செவியைத் திறந்தார்.
3. வாயைத் திறந்தார்
எண்ணாகமம் 22:28 கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
4. இருதயத்தைத் திறந்தார்
அப்போஸ்தலர் 16:14 தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லி யவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
5. மனதைத் திறந்தார்
லூக்கா 24:45,46 அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும் படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரில் இருந்து எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது.
.Author: Rev. M. Arul Doss